திருச்சி பூதூரில் பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு குற்றசாட்டு அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கல்லூரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் பிஷப் கல்லூரியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
திருச்சியில் பிரபல கல்லூரி நிர்வாகம் பிஷப் ஹீபர் கல்லூரி. திருச்சபையின் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வருகிறது இக்கல்லூரியில் தமிழ்த்துறைத் பேராசிரியராகவும் அந்த துறையின்தலைவராகவும் பணியாற்றி வந்தவர் பால் சந்திரமோகன்.இவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது அங்கு படிக்கும் முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் ஐந்து பேர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பாலியல் தொந்தரவு குறித்து ஐந்து பக்கத்திற்குக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் பிஷப் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பற்றி எழுதி இருக்கும் கடிதத்தில் சார் ரொம்ப மோசமான முறையில் நடந்துகொள்வார். நாங்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தால் எங்களை உரசிக்கொண்டே நடந்து போவார். எங்கள் அருகே மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்வார். இரட்டை அர்த்தத்தில் பேசும் படி சொல்வார் என பல குற்றச்சாட்டுகளை அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்கள்.
மேலும் அந்தக் கடிதத்தில், தமிழ்த் துறையில் பணிபுரியும் பெண் உதவிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து, “பால் சாரை பார்க்கப் போகையில் முகம் கழுவி மேக்கப் போட்டுக்கொண்டு தான் போகவேண்டும்” என்று வற்புறுத்துவார் எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கலலூரி விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது அதன் உறுப்பினர்களான வக்கீல் ஜெயந்தி ராணி,,பேராசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையக இருந்த உதவி பேராசிரியை நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு விசாரணை குழுவின் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ளார்கள்.
இதற்கு முன் பாலியல் குற்றச்சாட்டடு சுமத்தப்பட்ட PSBP பள்ளியை தேவைப்பட்டால் அரசாங்கம் ஏற்று நடத்தும் என உயர்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் கருத்துக்கள் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கருத்து ஏன் தெரிவிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது பிஷப் ஹீபர் கல்லூரியை அரசு கையகப்படுத்துமா என்று பொதுமக்கள் மாறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த புகார் தொடர்பாககாவல்துறை கூடுதல் துணை கமிஷனர் வனிதா தலைமையிலான குழு இந்த விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் அளித்த புகாரில் பேரில் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து பால் சந்திரமோகனை ஸ்ரீரங்கம் மகளிர் காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















