ஹெலிகாப்டரில் வந்து திருக்கோவிலூர் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த பாஜக தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VAT. கலிவரதன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு வாக்கு சேகரிக்க கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளருமான சி.டி.ரவி, வீரபாண்டி கிராமத்தில், திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஹெலிகாப்டரில் வந்து திருக்கோவிலூர் பாஜக வேட்பாளருக்கு தேசிய பொதுச்செயலாளர் தீவிர பிரச்சாரம்

இந்த பிரச்சாரத்தில் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, ஆரத்தி எடுத்து நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரபாண்டி, புளிக்கள், தண்டரை, தேவனூர், நயனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தின் போது, பாஜகவை சேர்ந்த கோலார் நாடாளுமன்ற உறுப்பினர் முனுசாமி, வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினி ,அதிமுக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,திருக்கோவிலூர் நகர செயலாளர் சுப்பு (எ) சுப்புரமணியன் மாவட்ட மாணவரணி தலைவர் பார்திபன்,திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன்,ஐ.டி.பிரிவு பொறுப்பாளர் ஜீவா வசந்த்,மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன்,ஒன்றிய தலைவர் பரதன்,ராமன்,அதிமுக மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன்,பாமக நிர்வாகிகள் சுடரொளி சுந்தர் ,விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிமுக,பாமக,பாஜக,தமாகா,புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version