கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமராஜன் தலைமையில் வருகின்ற 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது.
அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்தும் இந்து முன்னணி கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இதில் திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் தீர்த்தமலை, திருக்கோவிலூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை வைத்து வழிபடும் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
