கர்நாடக தேர்தல் கருத்து கணிப்புகளை மாற்றிய மோடி எனும் சுனாமி ! இது வேறே லெவல் !

கர்நாடக தேர்தல் கருத்து கணிப்புகளை மாற்றிய மோடி எனும் சுனாமி! இது வேறே லெவல்!

 கர்நாடகாவில் பாஜகவிற்கு தொடர்ந்து ஏறுமுகம் நாளுக்கு நாள் கர்நாடகாவில் பாஜகவிற்கு  கிடைக்க இருக்கு ம் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பதை கர்நாடகாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சி 130 -140 இடங்களில் வெல்லும் ஆட்சியை அமைக்கும் என முதலில் கூறி வந்த கருத்து கணிப்புகளை தவிடுபொடி ஆக்கியுள்ளது பிரதமர் மோடியின் பிரச்சாரம். பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு பிறகு பா.ஜ.கவிற்கு கிடைக்க கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.


பா.ஜ.கவிற்கு தற்போது உள்ள நிலையில் குறைந்த பட்ச வெற்றியாக 100-110 இடங்கள் உறுதியாக கிடைக்கும்.வாக்குப்பதிவு 65% க்குள் இருந்தால் பிஜேபி 135+ ஐ நிச்சயமாக தொட்டு விடும்.என கருத்துக்கணிப்புகள் வெளிவர தொடங்கியுள்ளது.வாக்குப்பதிவு 70%க்குள் இருந்தால் பிஜேபிக்கு 120+ தொகு திகள் உறுதி 75% க்குள் இருந்தால் பா.ஜ.க110 தொகுதிகளை கைப்பற்றும்.

எந்த ஒரு நிலையிலும் பாஜக இப்பொழுது உள்ள நிலையில் 100+ தொகுதிகளை விட்டு இறங்காது என்பதே உண்மையான கள நிலவரம். காங்கிரஸ் அசால்ட்டாக ஜெயிப்போம் என்று மமதையில் இருந்தவர்கள் பிரதமர் மோடி களத்தில் இறங்கிய பிறகு களம் கைமாறி விட்டதே என்கிற விரக்தியில் உள்ளார்கள்.

2019 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மாபெரும் வெற்றியை பெற்ற பா.ஜ.க இந்த சட்டமன்ற தேர்தலில் மோடி வளர்ச்சி என்கிற மந்திர சொல்லையே திருப்பி திருப்பி கூறிக்கொண்டு இருக்கிறார். மோடியின் மீது கர்நாடக மக்களுக்கு உள்ள நம்பிக்கையினால் கர்நாடகா தேர்தலில் இது எதிரொலிக்கும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனுமன் பக்தர்களின் அமைப்பான பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என கூறி இருந்தது. இதனால் காங்கிரஸ் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதை சரியாக பயன்படுத்தினார் பிரதமர் மோடி கர்நாடகாவில் அவர் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஜெய் பஜ்ரங்கபலி என முழங்கியது, மட்டுமல்லாமல் ‘வாக்கு செலுத்தும் போது ஜெய் பஜ்ரங் பலி என சொல்லி பட்டனை அழுத்துங்கள்’ என்றார் இது கர்நாடக முழுவதும் அனுமன் பக்தர்களை ஒன்றாக திரட்டியது.

தி கேரளா ஸ்டோரி படம் குறித்தும் பிரச்சாரத்தில் பேசியதும் மோடியின் அனல் பறக்கும் பிரச்சாரமும் கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலைக்கு கொண்டுவந்துளது. மோடி எனும் சுனாமி 2024 தேர்தலிலும் அடிக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.மோடி செல்லும் இடங்களில் மக்களின் ஆர்ப்பரிப்பு அதிகமாக காணப்படுகிறது. அவரின் பிரச்சாரம் மக்களை ஈர்த்து வருகிறது.

Exit mobile version