திருவண்ணாமலையில் உதயநிதி நடத்தியது ‘கிரி’வலமா? ‘சரி’வலமா?சனாதன தர்மத்திற்கான பரிகாரமா ? பாஜக நிர்வாகி கேள்வி.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செய்தும் திருந்தவில்லை என்பது அவருடைய சமீபத்திய X தள  பதிவு காட்டுகிறது.

*பாஜக எத்தனை சத்தமிட்டாலும்,அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது என பயத்தின் காரணமாகவும், அறியாமையிலும் துணை முதல்வர் உதயநிதி பிதற்றுகிறார்*.

திருவண்ணாமலையில்கிரிவலம் செய்தும் திருந்தவில்லை என்பது அவருடைய சமீபத்திய
எக்ஸ் தள பதிவு காட்டுகிறது. பாஜக தமிழகத்தில் அரசியலையும் ஆன்மீகத்தையும் காத்து, இணைத்து தான் திமுகவை வீழ்த்தப் போகிறது.

*கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம்*. *நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல  –  ‘சரி’ வலம்! என்று என்றும், ஓடாத தேரை ஓட வைத்தவர் கலைஞர், ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணி செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என்றும் போலி ஆன்மீக முகமூடி அணிந்து உதயநிதி செய்யும் அரசியல் இனி எடுபடாது*.

*ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று சொல்பவர்கள் ஒழிந்து போவார்கள் என்று குறிப்பிட்டதற்கு அஞ்சி, செய்த பாவத்திற்கு பரிகாரமாக குடும்ப ஜோதிடர் ஆலோசனையின் பேரில், தான் செய்த தவறை சரி செய்யும் “சரி வலம்” ஆக கிரிவலம் வந்ததை, திராவிட பாணியில், “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பாசாங்கு மொழி நடையில் பேசி உண்மையை மறைத்து நடிகர் உதயநிதி அரசியலிலும் நடித்து மக்களை ஏமாற்ற முடியாது*.

*துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே! மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு அர்ச்சகர் தன் குடும்பத்துடன் வாழ முடியுமா? ஒரு குறிப்பிட்ட கோவிலில் ஒருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை பொது வழியில்  குறிப்பிட்டு பேசும் போது, அச்சர்களை தெய்வத்தின் பிரதிகளாக மதிக்கும் இந்து இந்து மத சம்பிரதாயத்தில், ஆயிரக்கணக்கான கோவில்களில் உள்ள அர்ச்சர்களின் மனநிலை, சுயமரியாதை பாதிக்க படுகிறது என்பதை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு சொல்லிக் கொடுங்கள்*.

*அர்ச்சகர்களின் சம்பளத்தை உயர்த்துங்கள் இல்லை என்றால் அமைச்சர் சேகர்பாபு ராஜினாமா செய்து விட்டு, இந்து சமய அறநிலையத் துறையை துறையை கலைத்து விடுங்கள்*.

*இந்து மதத்தை அச்சாரமாக செயல்படும் இந்து இந்து கோவில்களுக்கு வழிபாட்டுக்கு செல்லும் பொழுது, காசு போடவில்லை என்றால் விபூதி கூட கிடைப்பதில்லை என்று இறைவனுக்காக தொண்டு செய்யும் தூய சேவைப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, இந்த 21ஆம் நூற்றாண்டு காலத்திலும்*, *தங்களுடைய கனவுகளையும்,  லட்சியங்களையும் ஆசைகளையும் துறந்து,பொருளாதார சுதந்திரம் மறுக்கப்பட்டு, கோவில்களில் பூஜை செய்யும் அந்த தொண்டு உள்ளங்களை எத்தனை இகழ்ந்தாலும் இந்து மதத்தை, இந்து கோவில்களின் வழிபாட்டு முறையை, உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதை துணை முதல்வர் உதயநிதியும், தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டும்*.

யாரோ ஒரு சில அர்ச்சகர் செய்யும் எதார்த்தமான தவறுக்காக, ஒட்டுமொத்த இறை தொண்டர்களை அவமதிக்கும் வகையில், தவறாக சித்தரிக்கப்படுவதற்கான சூழ்நிலையை மாற்றுவதற்கு தமிழக அரசு முயல வேண்டும்.
இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக அரசும்,தமிழக அறநிலைத்துறையும், அமைச்சர் சேகர்பாபு மட்டுமே காரணம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக சனாதன தர்மத்தையும், இந்து மக்களையும், இந்து கோயில்களுக்கு தொண்டு செய்யும் இறையடியார்களையும்
அழிக்க முயன்ற அந்நிய சக்திகளை வீழ்த்திய இந்து மத வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அரசியலும் ஆன்மீகம் இணைந்து, எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்து சனாதன தர்மத்தை காத்த மாபெரும் வரலாற்றை
துணை முதல்வர் உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின்நிர்வாக சீர்கேடுகளால்இயந்திரத்தனமான செயல்பாடுகளால் ஆன்மீகமும் தெய்வீகமும், ஒவ்வொரு ஊரில் உள்ள கோவிலுக்கும் கோவில் உருவான விதம், தல வரலாறு, பருவ கால மாற்றங்கள்,உலகின் தொன்மையான இந்து மதத்தின் விசேஷித்த பூஜை திரு நாட்கள், திருவிழாக்கள் இன்று சனாதன தர்மத்தின் படி வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை, அறியாமல், புரியாமல்,போலி திராவிட மாடல் ஆட்சியாளர்கள் சிதைத்து விட்டனர்.

இன்றைக்கு இந்து மக்களின் வழிபாட்டு முறைகளுக்கும் கோவிலில் நடக்கும் நித்திய பூஜைகளுக்கும்,
கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பூசாரிகள்,தீட்சிதர்கள், ஐயர்கள்,ஐயங்கார்கள்,
நம்பூதிரிகள், மேல் சாந்திகள் என பல சமூகத்தை சேர்ந்தவர்கள் பல காரணங்களுக்காக அந்தந்த கோவிலின் பாரம்பரியம் பெருமை புனிதம் ஆகம விதிகள் இவற்றிற்கு ஏற்பவாறு மிகவும் நுட்பமான முறையில் நம்முடைய முன்னோர்கள் சிந்தித்து வழிபாடுகளை உருவாக்கி இருக்கின்றனர். அதன் புனிதத்தை காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

இந்தியாவில் ஊடுருவி,இந்திய மன்னர்களிடையே பிளவு ஏற்படுத்திய முகலாய மன்னர்கள் இந்திய கோவில்களை
குறி வைத்து, கொள்ளையடித்து, சிதைத்து, இந்து மக்களை கொன்று குவித்து, இந்து மதத்தை நசுக்க முயன்று தோல்வி அடைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக வந்த பிரெஞ்சு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும்  கிறிஸ்து மதத்தை பரப்புவதற்காக, இந்திய மக்களை விஞ்ஞான ரீதியாக, உளவியல் ரீதியாக, சாதி மத வேறுபாடுகளை உண்டாக்கி, பிரிவினை வாதத்தை தூண்டி இந்து மதத்தை அழிக்க முற்பட்டனர்.


மன்னராட்சி காலத்தில்  யாருடைய தெய்வம் இல்லாமல் கோவில்களில்,
ஆகம விதிகள் பின்பற்றப்பட்டு நித்தியகால பூஜை முறையாக நடைபெற வேண்டும் இன்று அனைத்து கோவில்களுக்கும் மன்னர்கள் வழங்கிய நிலங்கள் அந்தந்த பகுதியில் வாழ்ந்த ஜமீன்தார்கள் செல்வந்தர்கள் வழங்கிய நிலங்கள் சூறையாடப்பட்டு ஆவணங்கள் திரிக்கப்பட்டு பட்டாக்கள் மாற்றப்பட்டு ஆங்கிலேய ஆட்சியில், கோவில்களின் பூஜையை தடுக்க, இந்து ஆகம விதிகளை வேரறுக்க, ஒவ்வொரு கோவிலுக்கும் காலங்காலமாக பணிபுரி செய்து வந்த மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இந்து கோவில்களையும் கோவிலையும் காற்று இந்து தர்மத்தை காத்து
இறைவனின் தூதர்களாக செயல்பட்டு வந்த  அனைத்து விதமான கோவில் அர்ச்சர்களையும் படிப்படியாக அழித்து வந்தனர்.

ஆனால் பல நூறு ஆண்டுகளாக இந்து மதத்தை அழிக்க செய்யப்பட்ட அனைத்து சதிகளையும், ஆன்மீக வளர்ச்சியை தடை  நடத்தப்பட்ட அனைத்து விதமான போர்களையும்  துணிவோடு எதிர்த்து நின்று, தங்கள் உயிர் பொருள், உடைமை, வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்து சனாதன தர்மத்தை காத்து நிலை நிறுத்த நம் முன்னோர்கள் செய்த தியாகம் ஈடு இணை இல்லாதது.

மேலும் சனாதன தர்மத்தை காக்க நம் இந்து மத பக்தியாளர்களால் நிறுவப்பட்ட நூற்றுக்கணக்கான மடங்கள் மற்றும் ஆழ்வார்களும், நாயன்மார்களும் உருவாக்கிய திருத்தலங்கள் இன்று உலகுக்குக்கே வழிகாட்டும் விதமாக தமிழகத்தில் தழைத்தோங்கி நிற்கின்றன.

சேர சோழ பாண்டிய விஜயநகர சாம்ராஜ்யங்கள் முதல் தமிழகத்தின் பல குறுநில மன்னர்கள் வரை அனைத்து ஆட்சிக்காலத்திலும்  சனாதன தர்மம் மக்களுக்கு நெறியோடு வாழ வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருந்தது.

அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய சோழ சேர பாண்டிய, விஜயநகர பேரரசுகள், வீர சிவாஜி கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் தொடங்கி
மகாத்மா காந்தி சுபாஷ் சந்திரபோஸ், மகாகவி பாரதியார் வரை சனாதன தர்மத்தின் வலிமையால் தான் சுதந்திரத்திற்காக எழுச்சியோடு போராடி தங்கள் இன்னுயிரை இழந்து சுதந்திரம் பெற்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் வகுப்புவாதமும் சாதிய மோதல்களும் துளிர்விட்ட பிறகு,அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் இந்து விரோத போக்கால், இந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாட்டால், அதைத் தொடர்ந்து அவர் அறிவித்த நெருக்கடி நிலை பிரகடனத்தால் இந்தியா முழுவதும் காங்கிரஸ் படிப்படியாக அழிவு நிலைக்குச் சென்றது.
திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக் கழகமும் , இந்து மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் வகையில்,
மனுவாதம்,மதவாதம் என பல தவறான கற்பனை கதைகளை அவிழ்த்து விட்டு,
இந்து மதத்திற்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து இந்து கோவில்களின் பூஜைகளையும் ஆகம விதிகளையும் வழிபாட்டு நடைமுறைகளையும்படிப்படியாக அழித்துக் கொண்டே வந்தனர்.

அரசியலுக்காக, இந்து மதத்தைச் சார்ந்த கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், கிறிஸ்துவ இஸ்லாமிய கடவுள் வழிபாட்டு முறைக்கு ஆதரவாகவும் , திட்டமிட்ட சதி செயல்களை அரங்கேற்றி,  இந்துமத நம்பிக்கையை, ஆன்மீக கோட்பாடுகளை  சிதைக்கும் வகையில் தமிழகமெங்கும் வன்முறை வெறியாட்டங்களை நடத்தி, சிறுபான்மை வாக்கு வங்கிகளை உருவாக்கி இன்று  கீழ்த்தரமாக பின் வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்து ஆணவத்துடன் சனாதன தர்மம் குறித்து ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசி அருவருக்கத்தக்க ஆபாச அரசியல் செய்து தான் விடியா திராவிட மாடல் ஆட்சி உருவாகியது.

2026 சட்டமன்றத் தேர்தலில் நேர்மறை அரசியலும், மனிதநேயத்தை வளர்த்து மக்களை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் சனாதன தர்ம கோட்பாடுகளும்,  ஆன்மீக சிந்தனையும் ஒன்றிணைந்து ஒரு ஆன்மீக மறுமலர்ச்சி புரட்சி உருவாக உள்ளது.

தமிழகத்தில் 75 ஆண்டுகளாக சூழ்ந்திருந்த திராவிட கடவுள் மறுப்புக் கொள்கை எனும் இருள் அகன்று, சனாதன தர்மம் என்ற  கலங்கரை விளக்கின் விழிப்புணர்வு வெளிச்சம் பாய்ந்து, இந்த விடியாத மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்

இனி இந்து விரோத திராவிட ஆட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில்
பெரும் வெற்றியுடன் பாஜக ஆட்சி அமையும் அறநிலையத்துறையை ஒழித்து இந்து கோவில்களும் இந்து மக்களும் இந்து மதமும்
பூரண சுதந்திரத்துடன், சனாதன தர்மத்தை கொண்டாடி மகிழும்.

என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version