கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில் இயங்கி வரும் அங்கவை சங்கவை அரசு மேல்நிலை பள்ளியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தலங்கள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா பகுதியை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஷோகில் ரானா(24) மற்றும் ரொகிதுல்(21) ஆகிய இருவரும் இரண்டாவது மாடியில் பணி செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்து தவறுதலாக கீழே விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்கு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார், எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் தொழிலாளர்களுக்கு வழங்காமல் பணியில் ஈடுபடுத்தியதாக ஒப்பந்த தொழிலாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
