உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக செய்திகள் பரவியது கடந்த ஒருவருடமாகவே இந்தச் செய்தி அடிப்பட்டுக் கொண்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்னதாக உதயநிதியிடம் இதை நேரடியாகக் கேட்டபோது அவர், ‘அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என கூறினார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் பரவின. இது வதந்தி தான் தான் என அக்கடிதத்தில் குறிப்பிட்ட்டுள்ளது.
அக் கடிதத்தில் முக ஸ்டாலின் கூறியியுள்ளதாவது : பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்கு இளைஞரணிச் செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி அவர்களே, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.
இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்.
கழகத் தலைவர் என்கிற பொறுப்பு உங்களில் ஒருவனாகிய எனக்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒப்புதலுடன், பொதுக்குழுவின் ஒட்டுமொத்த ஆதரவுடன் வழங்கப்பட்டிருக்கிற பொறுப்பு. முதலமைச்சர் என்கிற பொறுப்பு உடன்பிறப்புகளின் அயராத உழைப்பிலும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும் கிடைத்தது ஆகும். நம்பிக்கை வைத்து பொறுப்பினை வழங்கிய உங்களின் நலனுக்காக, என் சக்திக்கு மீறி உழைக்கின்ற வலிமை என்னிடம் உள்ளது.
என அக்கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளது இவ்வாறு வதந்திக்கு முதல்வரே பதிலளிக்க காரணம் என்னவாக இருக்கும் என விசாரித்த போது .உதயநிதி துணை முதல்வரானால் பல எம்.எல்.ஏக்கள்பாஜக பக்கம் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது என உளவுத்துறை முதல்வரிடம் கூறியது தான் என்கிறார்கள்.
மேலும் உதயநிதிக்கு துணை முதல்வர் பட்டாபிஷேகத்தை தள்ளி வைக்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பல திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மீது வெறுப்பில் தான் உள்ளார்களாம். தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை முக ஸ்டாலினால் ஏதும் செய்ய முடியவில்லை இரு அமைச்சர்கள் பதவி இழப்பு, மேலும் மக்களிடம் கெட்ட பெயர், மருமகன் சபரீசன் தான் திமுகவிற்கு ஆர்டர் போடுவது, எம்.எல்.ஏ பதவி இருந்தும் சம்பாதிக்க முடியாமல் போய் நாடு ரோட்டில் தான் நிற்க வேண்டியுள்ளது என புலம்பி தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க கூடாது என பல எம்.எல்.ஏ க்கள் கனைமொழியிடம் புலம்பியுள்ளார்கள். நீங்கள் தான் கட்சியை காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் இரண்டு வருடத்தில் கட்சி அதிமுக போல் கட்சி காணாமல் போய்விடும் இப்படியே அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை மேற்கொண்டால் பல எம்.எல்.ஏ க்கள் பாஜகவில் தஞ்சம் புகுவதற்கும் தயாராகி விட்டனர். என்ற பேரிடியை இறக்கியுள்ளார்கள்
இந்த நிலையில்தான் திமுகவின் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் திமுகவைச் சேர்ந்த கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான சாக்கோட்டை அன்பழகன்.இந்து மக்கள் கட்சி நடத்திய சனாதான பொங்கல் விழாவில் கலந்துகொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவி உடையில் வள்ளுவர் புகைப்படத்துடன், ‘சனாதானத்தை போற்றும் பொங்கல் விழா’ என்று அச்சிட்டு பேனர் வடிவமைத்திருந்த அந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
இது முக ஸ்டாலினின் காது எட்டியதும் தான் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளார். பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர் இதை யாரும் நம்ப வேண்டாம் என அறிக்கை விட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பட்டாபிஷேகம் தள்ளித்தான் போகிறது கைவிடவில்லை…