Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பிரதமர் மோடி தலைமையின் கீழ், உலகில், வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது: எல் முருகன்.

Oredesam by Oredesam
September 27, 2021
in செய்திகள், தமிழகம்
0
பா.ஜ.க தான் சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி! நேற்று மாநில தலைவர் இன்று மத்திய அமைச்சர். அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த கவுரவம்!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையின் கீழ், உலகில், வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது என  மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறினார்.சென்னையில் நடந்த வர்த்தகம்  மற்றும் வணிக  வார நிறைவு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கின் கீழ், இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக அங்கீகரிக்கப்படுகிறது. ஏற்றுமதி துறையில் இடைவிடாத சீர்திருத்தங்கள், நல்ல பயன்களை அளித்துள்ளன. சீர்திருத்தங்கள், எளிதாக தொழில் செய்வது ஆகியவற்றின் மீது பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை வைத்துள்ளார். ஏற்றுமதி வளர்ச்சி துறை மற்றும் ஏற்றுமதி தொடர்பான சீர்திருத்தங்களிலும், நாம் இவற்றை காணலாம். சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை, ஏற்றுமதி சார்ந்த திட்டங்கள் மூலம் ஏற்றுமதியை வர்த்தகத்துறை ஊக்குவிக்கிறது. ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் இந்த இரு கொள்கைகளும் தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றன.

தமிழ்நாட்டில் 49 சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,500 நிறுவனங்களுடன் செயல்பாட்டில் உள்ளன. இவை தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தமிழகத்தில் தேவையான வேலை வாய்ப்பு, சாதகமான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்திய ஏற்றுமதி சேவை திட்டம் (SEIS), மத்திய மாநில வரி தள்ளுபடி திட்டங்கள் (RoSCTL), போக்குவரத்து மற்றும் சந்தை உதவி (TMA) மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் மூலதன பொருட்கள் திட்டம் போன்றவை ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவுகின்றன.

ஏற்றுமதியில், தமிழ்நாடு 3வது பெரிய மாநிலமாக தற்போது உள்ளது. மாநிலத்தின் ஏற்றுமதி ஆற்றல் மிகப் பெரியவை. சென்னையிலிருந்து வாகனங்கள், நாமக்கல்லில் இருந்து கோழி வளர்ப்புத் தொழில், திருப்பூர்,கோயம்புத்தூரில் இருந்து ஜவுளித் தொழில், வேலூரிலிருந்து தோல் தயாரிப்புகள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பலவிதமான பொருட்கள் தமிழ்நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்டங்களில், ஏற்றுமதி வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இது உள்ளூர் அளவில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும்.  இது மாவட்டங்களுக்கு மட்டும் அல்லாமல், ஊரக பகுதிகளிலும் பொருளாதார உந்துதலை கொண்டுவரும்.

ஒவ்வொரு மாவட்டத்தையும், ஏற்றுமதி மையமாக மாற்ற வேண்டும்.  இந்த தொலைநோக்குடன், மத்திய அரசின்,  மாவட்டங்களை ஏற்றுமதி மையமாக்கும் முயற்சி தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலகளவில் 4வது இடத்தில் உள்ளது.17 முதல் 18 சதவீத வேளாண் ஏற்றுமதி இந்தியாவில் இருந்துதான் நடக்கிறது.  கடல்சார் துறையை உக்குவிக்க, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தை, ரூ.20,050 கோடி முதலீட்டில் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம், மீன்கள் ஏற்றுமதியை ரூ.46,662 கோடியிலிருந்து, 2024-25ம்  ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.  இத்திட்டத்தை தமிழக இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடற்பாசி விவசாயத்தில் உள்ள திறனை அங்கீகரிப்பது, கடலோர பகுதி மக்கள், சுயஉதவி குழுவினர், பெண்கள் வாழ்வில் மாற்றத்தை  இத்திட்டம் கொண்டு வருகிறது. இந்தியாவில் முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்கா தமிழகத்தில் அமைக்கப்பட்டது. 

முன்னணி ஏற்றுமதி மையமாக மாறத் தேவையான அனைத்து அம்சங்களும், தமிழ்நாட்டில் உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழில்துறையினர் தங்களின் தரமான தயாரிப்புகளை அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியை பெருக்க வேண்டும்.  ஏற்றுமதி செய்யப்படும் பொருள், பிராண்டு பெயரை மட்டும் அல்லாது, தமிழகம் மற்றும் இந்தியாவின் புகழையும் கொண்டு செல்கிறது. அதனால் தரத்தில் சமரசம் கூடாது. 

சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்தான் புதிய மந்திரம். தற்சார்பு இந்தியாதான் தொலைநோக்கு. உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்பதுதான், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல் திட்டம். சுதேசி இயக்கத்தை வழிநடத்திய வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழியை பின்பற்றி, பிரதமர் திரு நரேந்திர மோடி தற்சார்பு இந்தியா மற்றும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை, சுதந்திர இந்தியாவின் வைர விழாவில் அறிவித்தார். ஏற்றுமதிக்கு, புதிய துறைகள் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. உள்ளூர் தயாரிப்பு பொருட்கள், ஜவுளிகள், பொம்மைகள் ஆகியவை உலக சந்தையில் இடம்பெற ஊக்குவிக்கப்படுகின்றன.

ஒரு வார கால கொண்டாட்டம் மிகப் பெரிய வெற்றியடைந்ததில் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.  சுதந்திர இந்தியாவின் வைர விழாவை கொண்டாடுவதற்காக, வர்த்தக மற்றும் வணிக வாரம் நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை கொண்டாப்பட்டது.

இவ்வாறு மத்திய இணையமைச்சர் டாக்டர். எல் முருகன் பேசினார். 

சென்னை தாம்பரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மெப்ஸ்ல் நடந்த இந்த விழாவில் வெளிநாட்டு வர்த்தகத்துறை கூடுதல் தலைமை இயக்குனர் டாக்டர் எம்.கே. சண்முக சுந்தரம், இணை இயக்குனர் திருமதி எப்.டி.இனிதா மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !

சூர்யா எங்கே.. சூர்யா எங்கே … ஜெய் பீம் சூர்யாவை தேடும் நெட்டிசன்கள் ! காரணம் இதுதான்!

June 28, 2022

கர்நாடக,உத்தர கன்னடப் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

January 23, 2025
கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

மோடியரசு அதிரடி தொலைகாட்சிகளின் செய்லபாடுகளை கணிக்கணிக்க குழு அமைப்பு.

November 5, 2020
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்.

தமிழர்களுக்கு சாதகமாக நின்ற பிரதமர்! ஒப்புக்கொண்ட கர்நாடக காங்கிரஸ் முதல்வர்! வாய் திறக்காத திமுக!

April 23, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x