எதிர்பார்த்திடாத பாக் ! கடவுள் தான் காப்பாத்தணும்! கதறி அழுத பாதுகாப்பு துறை அமைச்சர்! அதிர வைத்த இந்தியாவின் வார்த்தை..

Pak Army

Pak Army

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் கற்பனை செய்ய முடியாத பதிலடியை இந்தியா தரும் என்று மோடி எச்சரித்துள்ளார். மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா எப்போது பதிலடி கொடுக்குமோ என்று தெரியாமல் அச்சத்தில் இருக்கும் பாகிஸ்தான், தினசரி ஏதாவது ஒன்றைச் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது மாதம் முழுக்க கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.கடந்த வாரம் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டனர். அங்கு பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கை அழகை ரசிக்க வந்த அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சமீப ஆண்டுகளில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது அறியப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது. இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து. அதேபோல பாகிஸ்தானியர்களின் விசாவை ரத்து செய்து சொந்த நாட்டிற்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளது.’விரைவில் போர் வரலாம்; 24 மணி நேரத்தில் வந்துவிடும். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்,” என பாகிஸ்தான், ராணுவ அமைச்சர் க்வாஜா முஹமது ஆசிப் அறண்டு போய் கதறுகிறார்.

வான்வெளி மூடல்
மேலும், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி நடத்துவது தொடர்பாக எந்தவொரு முடிவையும் ராணுவமே எடுத்துக் கொள்ளலாம் என்று முழுச் சுதந்திரத்தையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இதனால் இந்தியா எப்போது எப்படித் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி, கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

அதாவது மே மாதம் முழுவதும் தினசரி கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளைக் குறிப்பிட்ட நாட்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் பதிலடியை நினைத்துப் பயந்து போய் கிடக்கும் பாகிஸ்தான் தினசரி இதுபோல ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

பாகிஸ்தான் சொல்வது என்ன
இது தொடர்பாக அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “மே 1 முதல் மே 31 வரை உள்ளூர் நேரப்படி தினமும் அதிகாலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை குறிப்பிட்ட வான்வெளி மூடப்படும்” தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளியின் குறிப்பிட்ட பகுதியைத் தினசரி மூடுவதால் விமானச் சேவை எதுவும் பாதிக்கப்படாது என்றும் தடைசெய்யப்பட்ட நேரங்களில் விமானங்கள் வேறு பாதை வழியாகத் திருப்பி விடப்படும் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான்
முன்னதாக நேற்றைய தினம் தான் பாகிஸ்தான் நாட்டின் அனைத்து விமானங்களுக்கும் இந்தியாவின் வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் விமானங்கள் தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும் போது இந்தியாவைச் சுற்றிச் செல்ல வேண்டும். ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு இது பெரிய அடியாக இருக்கும். மேலும், இரு நாட்டுப் பதற்றமும் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக பாகிஸ்தான் பங்குச்சந்தை வேகமாகச் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எந்த நேரம் வேண்டுமானாலும் நம்நாட்டு படைகள் பாகிஸ்தானை பதம் பார்க்கலாம் என்ற நிலை தான் உள்ளது.
அதுமட்டுமின்றி ராணுவப்படை, விமானப்படை, கடற்படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இதனால் பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது. நம் நாட்டின தாக்குதலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் நம் தாக்குதலை முன்கூட்டியே கணிக்க பாகிஸ்தான் தனது ரேடார் சிஸ்டங்களை எல்லையை நோக்கி நகர்த்தி வருகிறது.ரேடாரை களமிறக்கி இருந்தாலும் கூட அது பெரிய அளவுக்கு அந்த நாட்டுக்கு பயனளிக்காது என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் நம்மிடம் ரேடாரில் சிக்காமல் தாக்குதல் நடத்தும் போர் விமானம், ஏவுகணைகள் உள்ளன. ஒருவேளை போர் விமானங்கள், ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் பாகிஸ்தானுக்குள் நுழைவதை அந்த நாட்டின் ரேடார் கண்டுப்பிடித்தாலும் கூட அதனை பாகிஸ்தான் இடைமறித்து அழிக்க வேண்டுஆனால் இந்தியாவுடன் ஒப்பிடும்போது இடைமறிப்பு திறனில் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி இருக்கிறது. எனவே இந்தியாவின் தாக்குதலை தடுப்பது என்பது பாகிஸ்தானுக்கு சவால் தான் என்கின்றனர் பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுநர்கள்.

மேலும் இந்தியாவை கண்டு பயப்படமாட்டோம் என்று தொடர்ந்து பாகிஸ்தான் அமைச்சர்கள் கூறி வந்தாலும் கூட அவர்கள் மரண பயத்தில் உள்ளனர். இந்நிலையில் தான் இந்தியாவின் தாக்குதலில் இருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். இது ராணுவத்தின் மீது நம்பிக்கை இழந்து இருப்பதை காட்டும் வகையில் உள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது:

‛‛இந்தியா உடனான மோதலுக்காக வாய்ப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போர் ஏற்படாமல் இருக்க நம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் இந்தியா உடனான மோதல் என்பது குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலைமையை தவிர்க்க பல நாடுகள் முயற்சி மேற்கெண்டு வருகின்றன” என்று கூறினார். இப்படி இந்தியாவுடனான மோதலுக்கு பயந்து, சொந்த ராணுவத்தினர் மீது நம்பிக்கை இல்லாமல் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார் என பாக் தரப்பில் கூறப்படுகிறது. தற்போதைய காஷ்மீர் தாக்குதல் குறித்து சார்பு இல்லாத நியாயமான சர்வதேச விசாரணையை நாங்கள் கோருகிறோம்” என்றார். இதன்மூலம் சண்டை வேண்டாம். விசாரணை மூலம் பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

Exit mobile version