சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்! 94,000 அணைகள் கட்டிய சீனா மூழ்கும் அபாயம்!

சீனாவுக்கு வெள்ளம் என்பது புதிதல்ல. கடந்த வருடம் ஜூன் மாதம் கூட த்ரீ கார்ஜஸ் அணை லேசாக நெளிந்து விட்டது என்றெல்லாம் அறிக்கை வரும் அளவுக்கு வெள்ளம் வந்தது. ஆனால், இப்பொழுது சீன வரலாற்றில் ஆயிரம் வருடங்களில் இல்லாத அளவிற்கு வெள்ளம் கதகளி ஆடுகிறதாம்.

இவ்வளவு பெரிய வெள்ளத்திற்கு முக்கியமான காரணமாக நீர் மேலாண்மை ஆய்வாளர்கள் சொல்லும் விசயம் என்னவெனில் சீனா தன் நாட்டில் கட்டியிருக்கும் அணைகள் தானாம். அதாவது, சீனா இதுவரை 94,000 அணைகள் கட்டியுள்ளது. ஆம்! தொன்னூற்றி நான்கு ஆயிரம் அணைகள்.

சீனாவில் ஆற்றில் போகும் தண்ணீரெல்லாம் மனிதனுக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டு அணைகளைக் கட்டி தண்ணீரை முழுவதும் தடுத்து வைத்துக் கொள்கிறோம். விளைவு? இயற்கையின் சமநிலையைத் தக்க வைத்துக் கொள்ள இயற்கை தன் வேலையைக் காட்டி விடுகிறது.

ஏற்கனவே, கடலுக்குத் தேவையான நீர் போகாததால் மஞ்சள் ஆறு கடலில் கலக்கும் கழிமுக மாகாணங்களில் எல்லாம் வறட்சி ஏற்பட்டுள்ளதை உணர்ந்த சீனா, தடுத்து பிரித்து விட்ட நீர் வழித்தடங்களையெல்லாம் மறுபரிசீலனை செய்து மீண்டும் கடலுக்கு நீரை அனுப்பத் தொடங்கியிருக்கிறது. அது கிழக்கு சீனாவில்.
அதே போல, தென் சீன எல்லைகளான வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து லாவோஸ்க்கு போக வேண்டிய ஆற்று நீரையெல்லாம் தடுத்து தன் நாட்டிற்குள் அணைகள் கட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது, நீர் தடுப்பு அரசியல் செய்து அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க திட்டமாம்.

ஜவஹர்லால் நேரு கொடுத்த வீட்டோ அதிகாரம் மற்றும் பணபலத்தை வைத்துக் கொண்டு அண்டை நாடுகளை மிரட்டும் சீனாவுக்கு இயற்கை இப்ப பாடம் புகட்டத் தொடங்கியிருக்கிறது. “எளியானை வலியான் அடித்தால், வலியானை வாசற்படி இடிக்கும்” என்ற பழமொழி சீனா விசயத்தில் வலு கூட்டுகிறது.
2020ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டும் சீனாவுக்கு 32 பில்லியன் டாலர்கள் நஷ்டமாம். அதாவது, நம் ரூபாயில் இரண்டு லட்சத்தி முப்பத்தி மூவாயிரம் கோடி ரூபாய்கள். (உயிர்ச் சேதம் பற்றி எப்பொழுதும் கணக்கு சொல்லாது சீனா) அணை கட்டியதிலும் செலவு அதனால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் செலவு. அப்புறம் எதற்கு அணை கட்டணும்?

இத்தனை அறிவியல்/பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் போதே இவ்வளவு பெரிய வெள்ளம் என்றால், நிஜமாகவே இயற்கையின் கோபம் எப்படி இருந்திருக்கும் என்று கவனியுங்கள். வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், அதன் போக்கினை பயன்படுத்து விவசாயத்தைப் பெருக்கவும் இயற்கையோடு இயைந்து ஆற்று நீரைத் தடுக்காமல் அணை கட்டச் சொல்லிக் கொடுத்த சாணக்கியர் போன்ற அறிஞர்களும் அதன் வழி கட்டமைத்த கரிகாலச் சோழன் போன்ற மன்னர்களும் எங்கே… பேராசையால் பெருந்தீனி தின்னும் சீனச் சில்லறைகள் எங்கே….!எல்லாவற்றிலும் சீனாவைப் போட்டியாகப் பார்க்கக் கூடாது. பன்றிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது! ஆனால், பசுவுக்கு?

Exit mobile version