யோகி ஆதித்யநாத் கடைசியாக பிப்ரவரி 2017ல் அவர் சொந்த ஊர் சென்றார். ஏப்ரல் 2020ல் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் மறைந்தார். ஆனால் அப்போதுகூட கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அவர் அங்கு செல்லவில்லை. இந்நிலையில் இரண்டாவது முறையாக உ.பி. முதல்வராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து யோகி ஆதித்யநாத் அவரது தாயை சந்தித்து ஆசி பெற்றார்.உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தாயை சொந்த ஊரில் சந்தித்து ஆசி பெற்றார்.
உத்தரப் பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ளார் யோகி ஆதித்யநாத். இந்நிலையில் நேற்று அவர் மூன்று நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்றார். அங்கு அவருடைய சொந்த கிராமமான பாவ்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள பஞ்சூருக்குச் சென்றார். அங்கே தனது தாயார் சாவித்ரி தேவியை சந்தித்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தனது தாயை சந்தித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த யோகி ஆதித்யநாத் அதற்கு அம்மா என்று தலைப்பிட்டுள்ளார்.
அரசுமுறை நிகழ்வாக அல்லாமல், குடும்ப விழாவில் கலந்துகொள்வதற்காக ஆதித்யநாத் உத்தரகாண்ட் சென்றது 28 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.