உ.பி காங்கிரஸ் வேட்பாளர் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்! எதிர் கேள்வி கேட்ட பெண் தாக்கப்பட்டார் ! வாய் திறப்பாரா ராகுலும் பிரியங்கவும்!

உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் இடைத்தேர்தலில் பாலியல் வழக்கில் சிக்கிய காங்கிரஸ்காரருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய காங்கிரஸ் பெண் தொண்டரை, காங்கிரஸ் கட்சியினரே தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பெண் தொண்டரை, அக்கட்சியினர் தாக்கினர்.

உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் தாரா யாதவ் என்ற பெண் தொண்டர், காங்கிரஸ் தொண்டர்களாலேயே தாக்கப்பட்டார். ‘கற்பழிப்பு’ குற்றசாட்டில் சிக்கியிருக்கும் முகுந்த் பாஸ்கர் மணியை தியோரியா தொகுதியின் கட்சி வேட்பாளராக நிறுத்துவதாக தாரா கூறினார். மேலும் கட்சியின் செயலாளர் சச்சின் நாயக்கிடம், கற்பழிப்பு குற்றம்சாட்டப்பட்டவரை தேர்தலில் நிறுத்தினால், கட்சியின் பெயர் கெட்டுவிடும் என அவர் கூறியதையடுத்து, தொண்டர்கள் அந்த பெண் நிர்வாகியை தாக்கியுள்ளார்

உத்திரபிரேதேசத்தில் ஹர்ஷாத் பகுதியில் தலித் பெண் படுகொலை விஷயத்தில் அரசியலாக்க நினைத்தும் சாதி கலவரங்களை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன தலித் பெண் விஷயத்தில் கண்டங்களை எழுப்பிய பிரியங்கா காந்தி ஊர்வலம் செய்து அரசியல் நாடகம் செய்த ராகுல் காந்தி அதே உத்திரப்பிரேதேசத்தில் கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார். இதை எதிர்த்து கேள்வி கேட்ட பெண் தாக்கப்படுகிறார். இப்போது வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறார் பிரியங்கா காந்தி ராகுல் காந்தி.

Exit mobile version