தெறிக்கவிடும் யோகி! ரவுடி முக்தார் அன்சாரியின் வீட்டை இடித்து தள்ளியது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்திர பிரேதேசம் ஆகும் அங்கு சுமார் 20 கொடுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள். யோகி ஆட்சி வந்தபிறகு மாநிலம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது . இதே போல் முன்பு ரவுடிகளின் கூடாரம் என அழைக்கப்பட்டது. தற்போது தொழிற்சாலைகளின் கூடாரம் என அழைக்கப்படும் போல. அது போல் ஆட்சி செய்து வருகிறார் யோகி.

ரவுடிகளை அடுக்குவதற்கு புதிய முறையை கையாள்கிறார். சொத்துக்கள் பறிமுதல் வீடு இடிப்பது என ஒரு ஸ்டைல் கடைபிடித்து வருகிறார். இதை கார்நாடகாவும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் லக்னோ நகரின் தலிபாக் காலனி அருகே ரவுடி முக்தார் அன்சாரிக்கு சொந்தமான சட்டவிரோத சொத்தை லக்னோ நிர்வாகம் இன்று இடித்து தரைமட்டமாக்கியது. இடிப்பதற்கான செலவைவீட்டை கட்டிய ரவுடி முக்தார் அன்சாரி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் கூறியதாவது “ரவுடி முக்தார் அன்சாரி சட்டவிரோதமாக தலிபாக் காலனிக்கு அருகே வீடு கட்டியுள்ளான் இது இன்று இடிக்கப்பட்டது. இடிப்பதற்கான செலவுகள் அவரிடமிருந்து மீட்கப்படும். மேலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். இந்த சட்டவிரோத கட்டுமானத்திற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளது.

ஜூலை 17’ஆம் தேதி, முதல் உத்தரபிரதேச அரசு ரவுடிகள் மற்றும் தாதாக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஜான்பூரில் முக்தார் அன்சாரி உதவியாளர்களின் ரூ 3.17 கோடி மதிப்புள்ள பல சொத்துக்களை நிர்வாகம் கைப்பற்றியது. அன்சாரியின் மற்றொரு உதவியாளரான ஸ்ரீபிரகாஷ் மிஸ்ரா என்ற ஜுன்னா பண்டிட்டின்50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை வாரணாசி போலீசார் ஜூலை 11’ஆம் தேதி ரவுடி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்தனர்.

ஜூலை மாதம் அன்சாரியின் நான்கு உதவியாளர்களின் ஆயுத உரிமங்களையும் காவல்துறை நிறுத்தியது. காசிப்பூர்காவல் கண்காணிப்பாளர் ஓ.பி. சிங், ” முக்தார் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி வீட்டில் இருந்து ஆறு ஆயுதங்களையும் 4,431 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் அதிரடியில் இறங்கியுள்ளார் மோடி. அதுமட்டுமில்லமல் இஸ்லாம் மக்களிடையே அவருக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது என உளவு துறை கூறியுள்ளது. வேலை இல்லாமல் ரவுடி திருட்டு தொழில் செய்தவர்கள் தற்போது அந்த மாநிலத்திலேயே வேலைக்கு செல்கிறார்கள் அந்த அளவிற்கு தொழிற்சாலைலைகளை கொண்டு வருகிறார் யோகி !

Exit mobile version