உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பாஜக அரசு தொடர்ந்து எடுத்து வருகின்றது.
இந்நிலையில் இதனை தொடர்ந்து தற்பொழுது,உத்தர பிரதேசத்தில், ‘லவ் ஜிஹாத்’தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.முஸ்லிம் அல்லாத பெண்களை, இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கில் காதலித்து திருமணம் செய்வது, ‘லவ் ஜிஹாத்’ எனப்படுகிறது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்கும் வகையில், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே சட்டம் அமலில் உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில், லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில், உ.பி., சட்ட விரோத மதமாற்ற தடை திருத்த சட்டம் — 2024 ஏற்கனவே அமலில் உள்ளது.இந்நிலையில், லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில், சட்ட விரோத மதமாற்ற தடை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சட்டத்திருத்த மசோதாவை, சட்டசபையில் மாநில அரசு நேற்று அறிமுகப்படுத்தியது.நாளை மறுதினம் இந்த சட்டத்திருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.