கடந்த 2001ஆம் ஆண்டு, தலிபான் தீவிரவாதிகளின் ஆட்டம் உலகம் முழுவதும் பரவி இருந்தது. ஆப்கனில் தான் அது மையம் கொண்டது. அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புப் படையினரால் ஆஃப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து தாலிபன்கள் அகற்றப்பட்டனர். தீவிரவாதிகளை களையெடுக்கவும் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலையினை நிலைநாட்ட உலக நாடுகள் விரும்பியது. அதே போல் அங்கு அமைதி திரும்பி கொண்டிருந்தது.
ஆப்கானில் அமெரிக்காவின் படைகள் நிலை கொண்டிருக்கும் இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக திரும்ப பெற்றுவிடும் என கடந்த வாரம் அமெரிகக் அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அமெரிக்கா வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள், கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தி இருக்கும் அமெரிக்க படைகளை முழுமையாக பபின்வாங்குவதாக தெரிவித்தார்.
ஏற்கெனவே 90% அமெரிக்கப்படைகள் நாடு திரும்பிவிட்டனர். இந்நிலையில் அமெரிக்கப்படைகள் திரும்ப பெறப்பட்ட பகுதிகளில் தாலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாலிபான் தீவிரவாதிகள்அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்படத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல இடங்களை கைப்பற்றிவிட்டார்கள் என மார்தட்டி வருகிறார்கள். அமெரிக்காவின் நடவடிக்கை உலக நாடுகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆப்கானிஸ்தான் அரசுக்கு உதவி புரிந்துள்ளது அமெரிக்க விமான படைகள். இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
ஆப்கனிஸ்தான் படைகளுக்கும் ஆப்கனிஸ்தான் அரசுக்கும் உதவுவதில் அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது கடந்த சில நாட்களாக, ஆப்கனிஸ்தானின் தேசிய பாதுகாப்பு படைக்கு உதவியாக அமெரிக்க விமான படைகள் இணைந்து விமான படை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் படைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து அமெரிக்க விமான படை தலிபான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது . அமெரிக்க ராணுவத்தின் மத்திய பிரிவு தளபதி கென்னத் மெக்கென்சி இதற்கான அனுமதியை வழங்கி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.