தமிழகத்தில் தரமான மத்திய அரசின் சாலைகள் நன்றி தெரிவித்த வானதிசீனிவாசன் எம்எல்ஏ

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களை இணைக்கும் மத்திய அரசின் நான்குவழிச் சாலை திட்டம் !

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதிஸ்ரீனிவாசன் எம்எல்ஏ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் வெள்ளக்கோயில் முதல் சங்ககிரி வரையிலான 70 கிமீ நான்குவழிச் சாலை ரூ.2000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார், நமது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அவர்கள்..

மேலும், இச்சாலை சங்ககிரி, வெப்படை, ஈரோடு, மொடக்குறிச்சி, விளக்கேத்தி, முத்தூர் வழியாக திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களில் அதற்கான டெண்டர் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சாலைப் போக்குவரத்தையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version