வானதி சீனிவாசன் கோரிக்கை! சிறுமி மித்ரா மருந்துக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தார் நிர்மலா சீதாராமன்!

முதுகெலும்பு தசைநார் பாதிப்புக்குள்ளான கே.எஸ்.மித்ரா என்ற 23 மாத பெண் குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக உயிர் காக்கும் மருந்து “ஜோல்கென்ஸ்மா” கொள்முதல் செய்வதற்காக, ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு வரிகளை தள்ளுபடி செய்ய திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வானதி சீனிவாசன் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்ததன் மூலம் மருந்துக்கான 6 கோடி இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகள் மித்ரா. 2 வயதாகிறது. இவர் திடீரென நடக்க முடியாமல் போய்விட்டார். மருத்துவர்களிடம் காண்பித்ததில் மித்ரா அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுமியின் உயிரை காப்பாற்ற ஸோல்கென்ஸ்மா எனும் மரபணு மாற்று சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த சிகிச்சைக்கு ரூ 16 கோடி செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அந்த தொகை மக்கள் மூலம் நிதி திரட்டினார்கள்.

அம்மருந்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது, மேலும் மருந்தின் ஜி.எஸ். டி, மற்றும் ஏனைய வரிகள் மட்டுமே கிட்டத்தட்ட 6 கோடியை நெருங்குகிறது. இதனை தொடர்ந்து மித்ராவின் மருந்திற்கான வரி இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசிடம் என கோரிக்கை வைத்தார் வானதி சீனிவாசன். அதனை தொடர்ந்து கண்காணித்து வந்தார்,

இந்த நிலையில் வானதி சீனிவாசன் அவர்கள் கோரிக்கை ஏற்று சிறுமி மித்ரா மருந்திற்கான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளார் மத்திய நிதி அமைச்சர். வரியை ரத்து செய்த நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன் அவர்கள்.

Exit mobile version