தமிழக சட்டசபையில், பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசியதாவது:-
செல்லும் இடங்களில் எல்லாம் நமது தாய்த் தமிழின் பெருமையை பேசும் உன்னத தலைவர்,
தமிழகத்திற்கு அதிகமான சீர்மிகு ஸ்மார்ட் சிட்டிகளை வழங்கிய சிறப்பான தலைவர்,
தமிழகத்தில் ராணுவ உற்பத்தி கேந்திரம் என்கிற டிபன்ஸ் காரிடார் வழங்கியதன் மூலம்
சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிர் அளித்த பூஉலகின் தன்னிகரற்ற தலைவர்,
அனைவருக்கும் வீடு, வீடுகள் தோறும் தூய்மையான குடிநீர் வழங்கிய தலைவர்,
தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய அன்புத் தலைவர்,
தமிழகத்திற்கு குறுகிய காலத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை தந்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கிய மகத்தான தலைவர், பெண்கள் வளர்ச்சியில் தனி கவனம்
செலுத்தி வரும் தலைவர், பெண்கள் திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக மாற்றிய தலைவர்,
முத்தலாக் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையில் பாதுகாப்பை ஏற்படுத்திய தலைவர், சிறுபான்மை பெண்களின் முன்னேற்றத்திற்காக 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தலைவர்,
நாடு முழுவதும் 10 கோடி கழிப்பிடங்களைக் கட்டி பெண்களின் கௌரவம் காத்த பெண்ணின காவலரான தலைவர்,
கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டு பிடித்து, நமது நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியதன் மூலம் கொரோனா தொற்றிலுருந்து விடுபட்டு, இப்போது சட்டசபையை நடத்துகின்ற வகையில் வழிநடத்திய தலைவர், உதவி செய்த தலைவர்,
சர்வதேச பிரச்சனையான ரஷ்ய – உக்ரைன் போரில் சிக்கிய நமது இந்திய மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்த அன்புப் பாதுகாவலர்,
உலக தலைவர்களிலேயே சிறப்பாக செயல்படக்கூடிய தலைவர் என்று பல்வேறு அமைப்புகளாலும், பத்திரிகைகளாலும் பாராட்டப்படக்கூடிய தலைவர்,
இந்தியாவை சர்வதேச அரங்கில் தலை நிமிர செய்துகொண்டிருக்கின்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் திசை நோக்கி வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்.
இவ்வாறு தனது உரையை தொடங்கியபோது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசினார்.
இதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் அவரது பேச்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார். பதில் அளிக்கிறேன் என்ற போர்வையில் அமைச்சர்கள் ஒவ்வொருவராக பேசி வானதி சீனிவாசனின் பேச்சுக்கு குறுக்கீடு செய்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















