உங்கள் நண்பரை 12 ஆம்வகுப்பு படிக்க சொல்லுங்கள் அன்பில் மகேஷ்… பங்கம் செய்த வானதி சீனிவாசன்..

சனாதனம் குறித்து அவதூறு பேசிய உதயநிதிக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தது. பிறகு சனாதனம் பற்றி நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று அந்த பல்டி அடித்தார். பல்வேறு பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பும் பொழுது மாற்றி மாற்றி பேசினார்.

அந்த பதட்டத்தை குறைத்துக் கொள்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பல காமெடிகளை பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் கொசு பத்தி சுருள் ஒன்றை பதிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அவரை உற்சாகப்படுத்தும் வகையில் அவரது நண்பரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் உதயநிதி ரசிகர் மன்ற தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நீ விளையாடு நண்பா என்று பதிவிட்டு இருந்தார்.

https://x.com/Anbil_Mahesh/status/1701151119920222209?s=20

இதற்கு பதிலடி தரும் விதமாக கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் சனாதன தர்மம் பற்றிய பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை பகிர்ந்து அன்பில் மகேஷ் அவர்களே முதலில் உங்கள் நண்பர் உதயநிதியை 12 ஆம் வகுப்பு புத்தகத்தை படிக்க சொல்லிவிட்டு பிறகு விளையாட சொல்லுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். திருமதி வானதி சீனிவாசன் அவர்களின் இந்த பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/VanathiBJP/status/1701526466624921685?s=20

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version