Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

Oredesam by Oredesam
March 21, 2023
in செய்திகள், தமிழகம்
4
விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு சார்பில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது இது குறித்து தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார்.

அதில்,
விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் தீர்வுகள் இல்லை ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் வழக்கம்போல வார்த்தை ஜாலங்கள் நிரம்பியதாகவே உள்ளது. மானியக்கோரிக்கையின்போது, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும், கொள்கை விளக்கக் குறிப்புகள், அறிவிப்புகளை, பட்ஜெட்டாக, வேளாண் அமைச்சர் வாசித்துள்ளார். பச்சை துண்டு அணிந்து கொண்டு பட்ஜெட் உரையாற்றியது. முதலமைச்சருக்கு, பூங்கொத்துக்குப் பதிலாக சிறுதானிய கதிர்களை பரிசளித்தது தவிர, பட்ஜெட்டில் புதுமை எதுவும் இல்லை.

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால், இந்த ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அதனை செயல்படுத்தும் வகையில் ரூ.82 கோடியில் சிறுதானிய இயக்கம், ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை, இவை வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வு காண பட்ஜெட்டில் எந்த தீர்வும் இல்லை. விவசாய செய்யும் பரப்பும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அரிசி, பருப்பு, எண்ணெய் வித்துகள், பெரிய வெங்காயம், காய்கறிகள் என அத்தியாவசியப் பொருட்களுக்குகூட மற்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது.

விவசாயிகளின் வருமானம் அதிகரித்தால்தான் அவர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் அதற்கு விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். உற்பத்தி அதிகமாகும்போது, சேமித்து வைக்கவும், மதிப்புகூட்டப்பட்ட பொருட்களாக மாற்றவும் அரசு திட்டங்கள் இருக்க வேண்டும். இதற்கு உருப்படியான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கினால், பல லட்சக்கணக்கான தென்னை விவசாயிகளின் துயர வாழ்வு முடிவுக்கு வரும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இந்த கோரிக்கையை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.

இதனை சுட்டிக்காட்டி, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என, சட்டப்பேரவையிலும், வெளியிலும் பலமுறை வலியுறுத்தினேன். அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் வழங்குவதாக அறிவித்துள்ள சிறு தானியங்களை தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய வேண்டும்.

நகர மயாக்கலால் தமிழகத்தில் விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக, கட்டிடங்களாக மாறி வருகின்றன. நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முடிவுகட்டாவிட்டால், வருங்காலத்தில் உணவுப் பொருட்கள் அனைத்திற்கு மற்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஆபத்தை திமுக உணர்ந்ததாகவே தெரியவில்லை.

ஒரு டன் கரும்புக்கு ரூ. 5,000, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. இதனை நிறைவேற்றினாலே, சரிபாதி விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்துவிடும். ஆனால், பெயரளவுக்கு மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்வதில்லை. ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல்லை எடுப்பதில்லை என, விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கான தீர்வுகளும் பட்ஜெட்டில் இல்லை.

மொத்தத்தில் வார்த்தை ஜாலங்களால், வெற்று அறிவிப்புகளால் விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்தோடு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வாங்கப் போனவருக்கு, கறிவேப்பிலை, கொத்துமல்லி மட்டுமே கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது திமுக அரசின் வேளாண் பட்ஜெட். என திமுக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மோடி பிரதமராக பதவியேற்ற தினத்தில் ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன!

மோடி சர்க்கார் 2.0 வில் ஓராண்டில் சாதித்தது என்ன? ராமர் கோவில் முதல் முத்தலாக் வரை சொன்னதை செய்தது !

May 30, 2020
100 கோடி வாங்கி தரேன் சொல்லி ஏமாற்றிய  ஹரி நாடார்! ஹரி நாடார் ரிலீஸாக வாய்ப்பில்லை ராசா!

100 கோடி வாங்கி தரேன் சொல்லி ஏமாற்றிய ஹரி நாடார்! ஹரி நாடார் ரிலீஸாக வாய்ப்பில்லை ராசா!

June 17, 2021
சிலர் களத்தில் இறங்குவதில்லை ட்விட்டரில் மட்டுமே இயங்குகிறார்கள்! பாஜக தலைவர் தாக்கு!

சிலர் களத்தில் இறங்குவதில்லை ட்விட்டரில் மட்டுமே இயங்குகிறார்கள்! பாஜக தலைவர் தாக்கு!

June 28, 2021
தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்!  அமைச்சரின் பதிலால் எழுந்த சர்ச்சை!

தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! அமைச்சரின் பதிலால் எழுந்த சர்ச்சை!

June 9, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x