பாலியல் வழக்கில் சிக்கிய வி.சி.க விக்ரமன்..விசாரணை முடிந்து முகத்தை மூடிக்கொண்டு காரில் ஏறி ஓடிய விக்ரமன்..

vikraman

vikraman

பாலியல் வழக்கு தொடர்பாக பிக் பாஸ் பிரபலமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியுமான விக்ரமன் கமிஷினர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்..பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன் மீதான விசாரணைக்காக விக்ரமன் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.

சென்னை கே.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில இணை செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வருகிறார். முன்பு தொகுப்பாளராக மீடியாவில் வலம் வந்த விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.

இந்த நிலையில்தான், விக்ரமன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் வசித்து வரும் கிருபா முனுசாமி என்பவர், ‘ஆன்லைன்’ வாயிலாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.

புகாரில் விக்ரமன் தன்னை காதலிப்பதாக கூறி நடித்து தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணமும்
விலை உயர்ந்த மடிக்கணினி உள்ளிட்டவற்றை தன்னிடம் இருந்து வாங்கிக் கொண்டார். தற்போது தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதுடன், ஜாதி பெயரை கூறி திட்டுகிறார் திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்,மேலும் என்னை காதலிப்பதாக சொல்லி மோசடி செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தேன்

ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் தெரிவித்திருந்தார்.மேலும் விக்ரமன் உரையாடிய வாட்ஸ் அப் உரையாடல்களும் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த புகாருக்கு விக்ரமன் மறுப்பு தெரிவித்திருந்தார். பெண் அளித்த புகாரின் பேரில், விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் வன்கொடுமை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக விக்ரமன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது 13 பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிந்து வெளியே வந்த விக்ரமன், அங்கிருந்த செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்ததும் முகத்தை மூடிக்கொண்டு காரில் வேகமாக சென்று விட்டார்.

Exit mobile version