உடைகிறதா விசிக … அடித்து ஆடும் ஆதவ் அர்ஜுனா… சிக்கலில் திருமா….என்ன நடக்க போகிறது?

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கடந்த ஒரு மாத காலமாகவே ஒரு இறுக்கம் இருந்தே வந்தது. கட்சியில் ஆரம்பக் காலத்திலிருந்தே உழைத்து கஷ்டப்பட்டு ரத்தம் சிந்தி, ஒரு பெரிய பானையை உருவாக்கினோம்.அதை தைரியமாக எடுத்து சொல்வதற்கும் ஆட்சியில் பங்கு கேட்பதற்கு குரல் ஆதவ் அர்ஜுனா வந்த பிறகு ஒலிக்க தொடங்கியுள்ளது வி.சி.க வில். ஆனால் திமுக விசிகவை அடித்து உடைக்க பார்க்கிறார்கள் என்று குமுறல்களை தெரிவித்துவருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ஆதவ் அர்ஜுனா திருமாவளவனின் படைபலம் குறித்து படித்து படித்து சொல்லியுள்ளார் அனால் அதை எதையும் கேட்காமல் திமுகவுக்கு செய்தி தெடர்பாளராக மாறியுள்ளார் திருமா.

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ”விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி இல்லாமல் வடமாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் ஏன் துணை முதலமைச்சர் ஆகக்கூடாது?” என ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்விக்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், எம்.பி. சிந்தனை செல்வன், துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோரே எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அடிமட்ட தொண்டர்கள் வன்னியரசு மற்றும் ரவிக்குமார் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள்.

இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா வெளிப்படையாகவே பத்திரிகையாளர்கள் மூலம் வலியுறுத்தினார்.

நிலைமை சீரியஸாவதை உணர்ந்த திருமாவளவன் விழுப்புரம் போதை மற்றும் மது ஒழிப்பு மாநாடு முடிந்த பிறகு ஆதவ் ஆர்ஜூனாவை ஒதுக்கி வைக்கிறேன் என்று திமுக தலைமையிடம் தெரிவித்தாராம்.ஆனால் இந்த தகவல் அன்றிரவே ஆதவ் அர்ஜுனாவிற்கு திமுக கேம்ப்பில் இருந்தே சென்றிருக்கிறது. அவர் திருமாவளவனை நேரில் சந்தித்து முறையிட்ட போது, அவர் அதிர்ந்துவிட்டாராம். நாம் சொன்ன தகவல் இரவே இவருக்கு வந்திருக்கிறது என்றால், எங்கேயோ குழப்பம் இருக்கிறது என்று நடவடிக்கையைத் தள்ளிப்போட்டாராம்.

அதோடு ஆதவ் அர்ஜுனா மீது கட்சிக்குள் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்பத்தில் கூறி வந்த திருமாவளவன், முடிவில் அவர் பேசியது சரிதான் எனக் கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் தன ஆனால் விஜய் மாநாடு நடந்து முடிந்த பிறகு ஆதவ் அர்ஜுனா, “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியுள்ள சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள்” என்று உடனடியாக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார்.

இம்முறை அறிவாலயத்தின் கோபம் வெளிவருவதற்குள் ட்சித் தலைவர் திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், வன்னியரசு, எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்கள் விஜய்யைக் கடுமையாகக் கண்டித்துப் பேசினர்.இங்கு தான் சிறுத்தைகளுக்குள்ளேயே கோபம் வெடித்தது ஏன் ஆதவ் பேசியதில் என்ன தவறு நாம் கட்சி ஆரம்பித்து ஆட்சியில் பகிர்வு கேட்கத்தான் தற்போது அந்த கொள்கையை எதிர்த்து பேசி வருவது நியாயமா மேலும் வன்னியரசு ரவிக்குமார் ஆளுநர் ஷாநவாஸ் மட்டும் எம்.எல்.ஏ எம் . பி . ஆனால் போதுமா மற்றவர்களுக்கு எப்போது வழி கிடைக்கும் என திருமாவிடம் பொங்க ஆரம்பித்துளார்கள்.

அதுமட்டுமில்லாமல் 2026 தேர்தலில் அதிக சீட் வேண்டும் என தற்போதே திமுகவிடம் கேட்டு சொல்லுங்கள்இல்லை என்றால் நாங்கள் எங்கள் வழியை பார்த்து கொள்கிறோம் என போர்க்கொடி தூக்கியுள்ளார்களாம் வி.சி.கவின் இரண்டாம் கட்ட தலைவர்கள். இதற்குஈழம் காரணம் எல்லாம் ஆதவ் தான் காரணம் எனவே அவரை கட்சியை விட்டு நீக்குங்கள் என ஆளுநர் ஷாநவாஸ்,வன்னியரசு போன்றவர்கள் குரல் உயர்த்தி உள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்ல ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து முயற்சித்தும் சந்திக்க நேரமோ, ஃபோனில் பேசவோக்கூட , திருமாவளவன் இதுநாள் வரை இடம் தரவில்லை என்கின்றார்கள் விடுதலை சிறுத்தை தலைமைக்கு நெருக்கமானவர்கள்.மேலும் ஆதவ் விரைவில் தனி கட்சி அல்லது தவெகவில் இணைவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆதவிடம் பணத்திற்கு பஞ்சமில்லை என்பதால் அவரின் அரசியல் பாதை வி.சி க வை உடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Exit mobile version