ஆள் இல்லாத வீட்டையும், ஆதரவில்லாதவர்களின் சொத்தையும் ஆட்டைய போடுவது நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வில்லிவாக்கம் நிலா அபகரிப்பு குறித்து விஷயமறிந்த லோக்கல் பிரமுகர்களிடம் பேசினோம். “சென்னை வில்லிவாக்கம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பசுபதி, மங்களேஸ்வரிதம்பதி. இவர்களது ஒரே மகள் சித்ராதேவி. இவருக்கு திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார்.
இதனால், பசுபதி, மங்களேஸ்வரியும் லண்டனுக்கே சென்றுவிட்டார்கள். எனினும், சொத்த ஊரில் ஒரு வீடு வேண்டுமே என்பதற்காக, 1982ம் வில்லிவாக்கம் என்.ஆர்.கார்டன் பகுதயில் 4,000 சதுர அடி இடத்தை மங்களேஸ்வரி பெயரில் வாங்கி, பங்களா டைப்பில் ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்கள். உறவினர்கள் இல்லநல்லது கெட்டதுகளில் பங்கேற்க லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் போதெல்லாம் இந்த பங்களாவில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்கிருக்கிறார்கள்.
இந்த நிலையில், மங்களேஸ்வரி தனது பெயரிலிருந்த சொத்துக்களை எல்லாம் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் பெயரில் 2011ம் ஆண்டு தான செட்டில்மென்ட் கொடுத்துவிட்டார். அதன் பிறகு லண்டனுக்கு சென்ற மங்களேஸ்வரி திடீரென மரணமடைந்து விட்டார். இதனால், துணைக்கு ஆள் இல்லாமல் தவித்த பசுபதி, மீண்டும் சென்னைக்கு திரும்பி இருக்கிறார்
தனது வயதான தந்ைதையை கவனித்துக் கொள்ள ஆள் தேவை என மகள் சித்ராதேவி செய்தித்தாளில் விளம்பரம் செய்திருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு வந்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்பவருக்கு மாதம் 20,000 சம்பளம் பேசி வேலைக்கு வைத்துக் கொண்டனர். இதனிடையே, பகுபதிக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. ஆகவே, அவரை வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ள
ஒரு செவிலியர் தேவைப்பட்டிக்கிறார்.
இகையடுத்து. விட்டு வேலைக்காரியான அம்பிகா மூலம் அரக்கோணத்தைச் சேர்ந்த சினேகலதா என்பவரை மாத ஊதியத்திற்கு வேலையில் அமர்த்தி இருக்கிறார்கள். சினேகலதாவுக்கு தமிழ் மற்றும் பல மொழிகள் பேசும் திறன் வாய்ந்தவர். இவர் பசுபதியோடு நெருக்கம்ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், சினேகலதா, அம்பிகா ஆகியோரிடையே கருத்து மோதல் வரவே, அம்பிகா வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு நடையை கட்டிவிட்டார். தகவலறிந்த வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த வி.சி.க. பிரமுகர் அப்புன் என்கிற தயாளமூர்த்தி என்பவர் பசுபதியை கவனித்துக்கொள்ள கமதி என்பவரை
அனுப்பி வைத்திருக்கிறார்.
இதனிடையே, பசுபதி உடல்நலக் குறைவால் 2020 டிசம்பரில் காலமாகி விட்டார்.இந்த செய்தியை லண்டனில் இருக்கும் மகள் சித்ராதேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 1 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே, அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிப்போம் என்றும், வீட்டை விட்டு வெளியேறுவோம் என்றும் தயாளஷூர்த்தி, அம்பிகா, சுமதி மற்றும் சினேகலதா ஆகியோர் கூட்டாக சேர்ந்துகொண்டு சித்ராதேவியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
எனவே, இது தொடர்பாக சித்ராதேவி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்த வழக்கு சிவில் வழக்கு. என்பதாலும், சம்பந்தப்பட்ட நபர் விசிக அரசியல் கட்சி தொடர்புடையவர்
என்பதாலும், நமக்கேன் வம்பு என்கிற ரீதியில் நீதிமன்றத்தை கைகாட்டிவிட்டு ஒதுக்கிக் கொண்டது காவல்துறை. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சூடுபிடிக்க நிலையில், வி.சி.க.பிரமுகர் தயாளமூர்த்தி உள்ளிட்டோரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட அருண் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்”
இது குறித்து வில்லிவாக்கம் காவல்நிலைய விஜயராஜனிடம் கேட்டோம். “இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில், காவல்துறையினரின் தனிப்பட்ட ரோல் எதுவும் இல்லை” என்று முடித்துக் கொண்டார்.