தலைவருக்கு பெர்த் டே கொண்டாட வசூல் சிறுத்தை அட்டகாசம்..! பெட்ரோல் பங்கில் அடிதடி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு சின்ன வளவனூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார் கடந்த 28ஆம் தேதி மகேஷ் கூட்டேரிப்பட்டு தொகுதியில் திறக்கப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு சென்று அங்கு பணியில் இருந்த மேலாளர் ரவி சங்கருடன் தங்கள் கட்சித் தலைவரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட நன்கொடை வழங்குமாறு கேட்டுள்ளார்.

ஹேப்பி பெர்த் டே கொண்டாட வசூல் சிறுத்தை அட்டகாசம்..! பெட்ரோல் பங்கில் அடிதடி

பணம் தர மறுத்ததால் மேலாளர் ரவிசங்கரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்ற மகேஷ் மீண்டும் 29ஆம் தேதி பெட்ரோல் பங்கிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

அங்கு நின்றிருந்த ரவிசங்கர் இடம் பணம் கேட்டால் தர மாட்டார்களா எனக் கேட்டு கன்னத்தில் அறைந்து அங்கிருந்த இரும்பு நாற்காலியை எடுத்து அவரை தாக்கியுள்ளார் இந்த தாக்குதல் காட்சிகள் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு மயிலம் காவல் நிலையத்தில் மேலாளர் ரவி சங்கர் புகார் அளித்தார் இதை எடுத்து பிசிகல் நிர்வாகி மகேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version