சென்னை கேகே நகர் பகுதியில் வசித்து வருபவர் விக்ரமன்.இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செய்தி தொடர்பாளராக உள்ளார்.இவர் யூடியூப் சேனலில் பணியாற்றி வந்தவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
இவர் மீது லண்டனில் வசித்து வரும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர் புகார் ஒன்றினை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக அளித்துள்ளார்.
அந்த புகாரில் விக்ரமன் என்னுடன் சமூக வலைதளம் வாயிலாக பழக்கமானவர் பின்பு காதலிப்பதாக கூறி 13 லட்ச ரூபாய் மற்றும் விலை உயர்ந்த மடிக்கணினி மொபைல் போன் ஆகியவற்றை வாங்கினார் தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள கேட்டபோது அதற்கு மறுப்பு தெரிவித்து ஜாதி பெயரை கூறும் திட்டுகிறார் என குறிப்பிட்டுள்ளார் இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் திருவாமுனுசாமி வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு அடுத்து வடபழனி மகளிர் போலீசார் விக்ரமின் மீது நம்பிக்கை மோசடி எஸ்சி எஸ்டி வன்கொடுமை பெண் வன்கொடுமை உள்ளிட்ட 13 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















