அவைத்தலைவர் ஆகிறாரா வேலுமணி! உள்ளாட்சியில் மண்ணை கவ்வும் பயத்தில் தி.மு.க! ரெய்டு பின்னணி இதுதானோ!

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைப்பற்றி பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதற்கு பதில் பலமான விமர்சனங்கள் தான் வரத் தொடங்கியது. இதை திசை திருப்பும் நிகழ்வாக வேலுமணி அவர்கள் வீட்டில் ரெய்டு நடந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

தி.மு.கவினர் சொல்லும் ஒரே முறையீடு வேலுமணி அமைச்சராக இருந்தபொழது அவர் வழங்கிய டெண்டர்களில் அனைத்து நிறுவனங்களும் லாபத்தில் இயங்குகின்றன. ஒரு கம்பெனி என்று இருந்தால் லாபத்தில் இயங்கும் என்பதில் என்ன தவறு அப்படி என்றால் அரசிடம் டெண்டர் இருக்கும் அனைத்து கம்பெனிகளும் நஷ்டத்தில் இயங்க வேண்டுமா என்ன பொருத்து இருந்து பார்ப்போம்.

தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தி.முக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே இலவசங்கள் மற்றும் மானியங்கள் கொடுத்து தமிழகத்தை கடன்கார மாநிலமாக்கி விட்டார்கள் என்று பொதுமக்கள் பரவலாக பேச ஆரம்பித்து விட்டார்கள். தமிழக அரசு எந்த சலுகை கொடுத்தாலும் அதற்கு ஆதரவை விட எதிர்ப்புதான் அதிகம் இருக்கும் காரணம் கடன் கார மாநிலமாக உள்ள இங்கு இலவசம் தேவையா என்று பேசப்படும். எல்லாவற்றுக்கும் வெள்ளை அறிக்கை தான் காரணம்.

மேலும் உள்ளாட்சி தேர்தல் வேலைகள் பரபரப்பாக ஆரம்பித்து விட்டார்கள் அனைத்து கட்சியினரும். திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தினம் ஒரு வெத்து அறிக்கையை வெளியிட்டு வருகிறது திமுக அரசு. 100 நாட்களில் மக்கள் குறைகளை தீர்ப்பேன் என கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்த திமுக தற்போது அறிக்கைகளை விட்டு சப்பை கட்டு கட்டி வருகிறது.

மேலும் மின்சார கட்டணம் கரண்ட் கட் சத்தமில்லாமல் பேருந்து கட்டணம் உயர்வு அடிதடி மணல் கடத்தல் அதிகாரிகள் மிரட்டல் திமுக தனது பணியை செவ்வெனே செய்து வருகிறது. இதன் காரணமாக ஸ்டாலின் அரசின் மீது மக்களிடம் வெறுப்புணர்வு வந்து விட்டது. இது உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்.ஒரு வேளை உள்ளாட்சியில் திமுக மண்ணை கவ்வினால் ஸ்டாலின் அரசு 5 ஆண்டுகள் நீடிப்பது சந்தேகமே.

மேலும் கொங்கு மண்டலத்தில் திமுக தோற்றதற்கு காரணம் வேலுமணி அதனால் அவரை எப்படியாவது முடக்க வேண்டும் என தி.மு.க கணக்கு போட்டது. வேலுமணி மீது ரெய்டு நடவடிக்கை எப்போதே எடுக்கப்பட்ட முடிவு. மேலும் அதிமுக அவை தலைவர் மது சூதனன் சில நாட்களுக்கு முன் மறைந்து விட்டார். அவை தலைவர் பதவி என்பது அதிமுகவில் மிக முக்கியமான பதவி ஆகும். அடுத்த அவை தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவில் நிலவி வருகிறது.

மேலும் முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுக அவை தலைவராக முயற்சி செய்து வருகிறார். அவை தலைவர் ஆனால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுகவை வலுப்படுத்த களத்தில் இறக்கப்படுவர். கொங்கு மண்டலம் பார்முலா தமிழகம் முழுவதும் அப்ளை பண்ணுவதற்கு அதிமுக தலைமைகள் முடிவு செய்து விட்டார்கள் ரெய்டுக்கு அதுவும் ஒரு காரணம்.

சட்ட மன்ற பட்ஜெட் கூட்ட்தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் வேலுமணி மற்ற அதிமுக வினரையும் முடக்க செய்ய இந்த நடவடிக்கை. மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேலை செய்ய கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட ரெய்டு தான் இது.

Exit mobile version