தி.மு.க வெற்றி பெற்றததுக்கு காரணம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களோ மறைந்த கருணாநிதியோ திமுகவினரோ இல்லை. தி.மு.க வெற்றிக்கு முழுக்க முழுக்க சிறுபான்மை மக்களே காரணம் என சிறுபான்மையின தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
தி.மு.க வெற்றி பெற்றதற்கு நாங்கள் போட்ட பிச்சை என கிறிஸ்துவ பாதிரியார் கூறினார். அதை பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்தது கழகம்.
ஜமாத்தில் இமாம்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாகவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று இஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் மதபோதகர் ஒருவர் பேசியுள்ளார்.
சந்தேகம் எது மதசார்பின்மை! மு.க ஸ்டாலின் முதல்வாரான பின் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார்.கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை இதுதான் மத சார்பின்மையோ? மதசார்பற்ற முதல்வரா!
அரசு என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது.அனைத்து மத மக்களுக்கும் வாக்களித்து தான் அரசினை தேர்தடுத்துள்ளார்கள் . இதில் மத பாகுபாடு காட்டி ஆட்சி நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியாவில்லை.
அது என்னவோ தெரியவில்லை, பக்ரீத் என்றால் தெருவில் ஆடுமாடு வெட்டி கொண்டாடலாம், மக்கள் கூடி பிரார்த்திக்கலாம் தூத்துகுடி உள்ளிட்ட தேவாலயங்களில் ஊர் கூடி கொண்டாடலாம்.உள்ளூர் விடுமுறையுடன்.
ஆனால் இந்துக்களுக்கு மட்டும் ஆயிரம் கட்டுபாடுகளை விதிக்கின்றது விடியல் அரசு, ஒடிசாவிலும் கொரோனா உண்டு அங்கு அந்த அரசு மிக கவனமாக பூரி ஜெகநாதர் ஆலய திருவிழாவினையெல்லாம் நடத்தி முடித்திருக்கின்றது
இங்கே விநாயக சதுர்த்திக்கு ஆயிரம் கட்டுபாடுகள், இப்பொழுது அவரவர் வீட்டிலே பிள்ளையாரை வணங்கி அவர்களே தனியாக சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம் என்கின்றது.
அதாவது நீர் நிலைகளுக்கு மக்களே சென்று பிள்ளையார் சிலையினை கரைக்கலாமாம் ஆனால் இதே அரசுதான் ஆடிமாதம் ஆடிபெருக்கு அன்றும் ஆடி அமாவாசை அன்றும் மக்கள் நீர் நிலைகளுக்கு செல்ல கூடாது என தடைவிதித்தது குறிப்பிடதக்கது
ஆடியில் ஒரு காரியத்துக்கு தடை, ஆவணியில் அதே விஷயத்துக்கு அனுமதி என்பதெல்லாம் இந்த அரசு முழு டாஸ்மாக் அரசாக இருக்க வேண்டும் அல்லது இந்துக்கள் விஷயத்தில் மகா குழப்பமான கொள்கை கொண்ட அரசாக இருக்க வேண்டும் என்பதை சொல்கின்றது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















