‘பிகில்’ படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்புகள் குறித்தும், கடந்த மதம் 5 ஆம் தேதி நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. முக்கியமாக விஜயின் குடும்பம் லண்டனில் பலகோடி முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது விஜய் மற்றும் அவரின் குடும்பத்தார் செய்த சொத்து முதலீடு குறித்து நடிகர் விஜய் மற்றும் மனைவி சங்கீதா இருவரிடமும், வருமான வரி அதிகாரிகள், 24 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பிகில் திரைப்படத்தின் வசூல் குறித்து வெளியான தகவலை தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்., உரிமையாளர்கள் அலுவலகம், வீடு மற்றும் தியேட்டர்களிலும், இப்படத்திற்கு பைனான்ஸ் செய்து உதவிய அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மூவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் ‛மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அங்கு சில ஆவணங்கள் சிக்கியுள்ளதை தொடர்ந்து விஜய்யின் பனையூர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்திற்கு கிடைத்த சம்பளம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பணம் வந்துள்ளது அதை பற்றி விசாரிக்கவே இந்த சோதனை என கூறுகிறார்கள் . ஹவாலா மோசடி மதமாற்றத்திற்கு வந்த பணம் என பல அடுக்கடுக்கான புகார்கள் செய்திகளாக வர தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் விஜய் பிகில் படத்திற்கு 50 கோடியும் மாஸ்டர் படத்திற்க்கு 80 கோடி யும் சம்பளமாக பெற்றுள்ளார் விஜய் அவர்கள். அதற்கு வருமான வரி செலுத்தியுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. விஜயின் வழக்கு முடித்துவைத்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்த செய்தியை கேட்டு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.