பா.ஜக.வில் விஜயசாந்தி ? தெலுங்கானா அரசியலில் திருப்பம்!

விஜயசாந்தி மீண்டும் பாஜகவிற்கு வருவது உறுதியாகி விட்டது. வருகின்ற 20ம் தேதி டெல்லியில் நட்டா முன்னிலை யில் இணைகிறார் என்று தெலுங்கானா பாஜகவினர் கூறி வருகிறார்கள்.காங்கிரஸ் தரப்பில் இருந்து நம்ம மாணிக்தாகூர் மூலமாக கன்வின்ஸ் செய்துகொண்டு இருக்கிறார்கள். விரைவில் குஷ்பூ மாதிரி விஜயசாந்தியும் பாரத்மாதா கி ஜே என்று கூறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

காங்கிரஸ் மாதிரி கழிசடை கட்சியில் இருந்து காலத்தை வேஸ்ட் செய்வதைவிட 1998 ல் பிஜேபியில் இணைந்த உடனே பிஜேபியின் தேசிய மகளிர் அணியின் செயலாளராக இந்தியா முழுவதும் வலம் வந்த தன்னுடைய பழைய நினைவுகளை விஜயசாந்தி நினைத்து கொண்டு இருப்பார் .

பிஜேபியில் விஜயசாந்தியின் ரீ என்ட்ரி தெலுங்கானாவில் பிஜேபிக்கு மிகவும்பயனுள்ளதாக இருக்கும் என்பதால் தெலுங்கானா விஜயசாந்தியின் என்ட்ரியை ஆவ லோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது டுபாக்கா இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பிஜேபிக்கு வருவது தொடர்ந்து கொண்டே இருக்கும். என்கின்றது பாஜக வட்டாரங்கள்

எழுத்தாளர் : விஜயகுமார் அருணகிரி
..

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version