தமிழகத்தில் சென்ற வாரம் திரைப் பிரபலங்கள் என்ற போர்வையில் திமுகவின் ஆதரவாளர்களான யுவன்சங்கர்ராஜா ,ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற சிலர் இந்தி தெரியாது போடா என்ற டீ-சர்ட்டை அணிந்து போஸ் கொடுத்தனர் இதற்கு மூல காரணம் பீகாரின் பிரசாந்த் கிஷோர் ஆவார் .
ஆனால் இந்த திட்டம் ஒன்றிணைவோம் வா திட்டத்தை போல் படுதோல்வியை தழுவியது.ஏனென்றால் இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புக்குரல் உருவானது ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தரப்படுகிறது.ஆனால் ஏழை மக்கள் பிள்ளைகள் ஹிந்தி கற்று கொள்ள கூடாது என திமுக போராடுவது ஏன் என்ற கேள்வி மேலோங்கியது இது மட்டுமில்லாமல் இந்தி தெரியாது போடா என்ற கூட்டத்திற்கு எதிராக பாஜக இளைஞரணி களத்தில் இறங்கியது.
அவர்கள் நான் தமிழ் பேசும் இந்தியன் டா நான் இந்தி கற்றுக் கொள்ளும் தமிழன் என்று வசனங்கள் அடங்கிய டி ஷர்ட் அணிந்து பதிலடி கொடுத்தனர்.இது ஒரு புறமிருக்க திமுகவுக்கு எதிராக தற்போது தே.மு.தி.க தலைவரின் மகன் விஜயபிரபாகரன் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது அதற்கு காரணம் திமுக போல் மக்களை ஏமாற்றாமல் பொது சிந்தனையோடு இருக்கும் வகையில் ஒரு டி-சர்ட் அணிந்திருந்தார்.
அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் இடம் பெற்றுள்ள வாசகம் அன்னை மொழி காப்போம் ! அனைத்து மொழியும் கற்போம் !! தமிழன் என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து நில்லடா !! என்ற வாசகம் பொருந்திய டீசர்ட் அணிந்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இது தி.மு.கவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இது நாள் வரை பாஜக மட்டுமே மும்மொழி கொள்கைக்கு ஆதரித்து வந்த வந்த நிலையில் தற்போது தேமுதிகவும் அதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது திமுகவினை கலக்கமடைய செய்துள்ளது. விஜயகாந்த் என்றால் ஒரு ஈர்ப்பு தமிழகத்தில் உள்ளது, மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு மேடையில் இந்த வசனத்தை பேசினார். அது தற்போது வைரலாகி வந்த நிலையில் அவரின் மகன் விஜயபிரபாகரன் புகைப்படம் வைரலாகி வருவது குறிப்பிட தக்கது. இது அதிமுகவில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு மொழிக்கொள்கைதான் தமிழகத்தில் கடைபிடிக்கும் என அறிவித்தது. இந்த நிலையில் பாஜகவும் தேமுதிகவும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது சற்று அதிமுகவிற்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பிரேமலதா விஜயகாந்த் அதிமுகவின் கூட்டணி இருக்கிறோம் ஆனால் கடைசி தேர்தல் வரு போது கூட்டணி குறித்து பரிசீலிப்போம் என தெரிவித்திருந்தார் இந்தநிலையில் தி.மு.க வுடன் தே.மு.திக ரகசிய பேச்சுவார்த்தை என செய்திகள் வெளிவந்தத. அதிமுகவுடன் மோதல் தேமுதிக தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை என பல செய்திகள் பரவின. இதெற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் தனது டீ சர்ட் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தெரிகின்றது.
திமுகவின் அரசியலே மொழி வைத்துதான் இதில் மண்ணை அள்ளி போடும் வகையில் தேமுதிக செயல்படுவதால் கண்டிப்பாக கூட்டணி இருக்காது என தெளிவாக புரிய வைத்துள்ளார் விஜயபிரபாகரன். மேலும் பாஜகதலமியின் கீழ் புது கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி தற்போது எழதொடங்கிவிட்டது.பார்க்கலாம் என்ன நடக்கிறது என இன்னும் 8 மாத காலம் இருக்கிறது.