சங்கராபுரம் அருகே 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !

கள்ளக்குறிச்சி மாவட்டம்,சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் கோமதி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது,

இந்த நிலையில் புத்திராம்பட்டு கிராமத்தில் தங்கராசு மகன் பொண்ணையனுக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதலுக்காக 4000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்யராஜிடம் பொன்னையன் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் பணத்தை கொடுக்கும் பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் கிராம நிர்வாக அலுவலர் கோமதி என்பவரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது,

Exit mobile version