‘நாங்களும் அதையே தான் சொல்றோம் படத்தை படமா பாருங்க’ – தி கேரளா ஸ்டோரி குறித்து வானதி சீனிவாசன் !

அளித்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள் இப்படத்தை பற்றி கர்நாடக தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் :
இந்த படம் குறித்த சர்ச்சைக்கு பா.ஜ.க எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் கூறுகையில் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு.அந்த சுதந்திரம் குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. அதை நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவை நீதிமன்றம் மறுத்து இருக்கிறது. படங்களை படங்களாகப் பாருங்கள் என்று எத்தனையோ தடவை மாற்றுக்கட்சியினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள். நாங்களும் அதைத் தான் அவர்களுக்கு சொல்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

இது இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளுக்கு சம்மட்டி அடி போல் விழுந்துள்ளது

தி கேரளா ஸ்டோரி படம் குறித்த சர்ச்சைக்கு பாஜக எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன் அளித்திருக்கும் பேட்டி சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகி உள்ளது. தற்போது இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படம் லவ் ஜிகாத்தை மையக்கருவாக வைத்து படமெடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது

இப்படத்திற்கு இசுலாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இந்தப்படத்தை தடைசெய்ய கோரி உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள்.ஆனால் உச்சநீதிமன்றம் இந்த படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து படம் வெளியாகி வெற்றிகரமாக இந்தியா முழுவதும் ஓடி கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச அரசு இப்படத்திற்கு வரிவிலக்

அளித்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள் இப்படத்தை பற்றி கர்நாடக தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் :
இந்த படம் குறித்த சர்ச்சைக்கு பா.ஜ.க எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் கூறுகையில் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு.அந்த சுதந்திரம் குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. அதை நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவை நீதிமன்றம் மறுத்து இருக்கிறது. படங்களை படங்களாகப் பாருங்கள் என்று எத்தனையோ தடவை மாற்றுக்கட்சியினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள். நாங்களும் அதைத் தான் அவர்களுக்கு சொல்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

இது இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளுக்கு சம்மட்டி அடி போல் விழுந்துள்ளது.

Exit mobile version