பழனியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க போராட்டம் நடத்தியது. இது தொடர்பாக பாஜகவினர் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கையில் இறங்கியது. 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது இது குறித்தும் பாஜகவின் பா.ஜ.க ஓ.பி.சி மாநில பொதுச்செயலாளர் சூர்யாசிவா திருச்சி காவல்துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது பதிவு :
ஒட்டன்சத்திரத்தில், உணவுத்துறை அமைச்சர் திரு சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு பழனி கனகராஜ் அவர்களின் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக பாஜக.
இந்நிலையில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பா.ஜ.க நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது திமுக அரசு. கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக பா.ஜ.க செய்து வருகிறது.எங்கள் நிர்வாகிகள் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவர்களை வரவேற்க தமிழக பாஜக தயாராக இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்!
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் பா.ஜ.க ஓ.பி.சி மாநில பொதுச்செயலாளர் சூர்யாசிவா திருச்சி காவல்துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சூர்யா சிவா கைது குறித்து அண்ணாமலை :
ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது திமுக அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. சகோதரர் சூர்யா சிவா அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக பாஜக. பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று திரு மு.க ஸ்டாலின் மற்றும் செல்வி மம்தா பேனர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. என பதிவிட்டுள்ளார்.