தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்ற பிம்பத்தை உருவாக்க நினைக்கிறது தமிழக திராவிட மாடல் அரசு இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2014-2023 காலகட்டத்தில் தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடி வரியாக பெற்றது. பெற்ற வரியை விட கூடுதலாக தமிழகத்திற்கு ரூ.6.69 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம்” என அப்பன் வீட்டு பணமா என கேட்ட அறிவாலய அமைச்சர்களுக்கு பதிலடி தந்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2014-2023 வரை தமிழகத்திடம் மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட கூடுதலாக நிதி கொடுத்துள்ளோம்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலத்திற்கும் மாதம் தோறும் நிதி கொடுத்து வருகிறோம். தமிழகத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு 37 ஆயிரத்து 965 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். அதேபோல் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, 11 ஆயிரத்தி 116 கோடி ரூபாயும், கிராமப்புரத்தில் வீடுகள் கட்டுவதற்காக, 4ஆயிரத்து 836 கோடி ரூபாயும் கொடுத்துள்ளோம்.
முன்கூட்டியே நிதி
மாதம் தோறும் அனைத்து மாநிலங்களுக்கும் போக வேண்டிய பணம் சரியாக போய்விடுகிறது. அதை தவிர, சில மாதங்களில் அடுத்த மாதங்கள் கொடுக்க வேண்டிய பணம் முன்கூட்டியே கொடுக்கப்படுகிறது. தீபாவளிக்கு செலவு இருக்குமே, பொங்கலுக்கு செலவு இருக்குமே என்று முன்கூட்டியே கொடுக்கிறோம்.
ஜிஎஸ்டி வரி
தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்டி வரியாக 36ஆயிரத்தி 350 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் 37 ஆயிரத்தி 370 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்கு தான் கொடுத்துள்ளோம். பாகுபாடு இல்லாமல் திட்டம் அனைவருக்கும் கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்திற்கு கூடுதலாக நிதி கொடுத்துள்ளோம். வரி தொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம்.