தமிழக பா.ஜ.க தலைவராக, இருந்த முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை அறிவித்தது தேசிய பா.ஜ.க . இளம் வயதில் ஒரு கட்சியின் தலைவர்பதவியை அளித்தது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை அவர்கள் வரும் 16ம் தேதி தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கிறார்.
இந்த நிலையில் அதற்காக, இன்று ஜூலை 14 இருந்து, கோயம்பத்தூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் வரும் வழியில் 20 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலை அவர்களுக்கு வழியெங்கும் பா.ஜ.கவினர் மேளதாளங்கள் முழங்க கும்ப மரியாதை அளித்தார்கள்.சென்னை கிளம்புவதற்கு முன் அண்ணாமலை அவர்கள் அவிநாசி தண்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார், பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை:
பாஜக ஒரு தனிமனித கட்சி கிடையாது. தலைவர் என்ற பொறுப்பு, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதாகும். நிச்சயமாக பாஜகவை வளர்க்கவும், வலுபடுத்தவும் வேண்டும். பாஜக சார்பில் தமிழ்நாட்டில் இருந்து அதிக எம்.எல்.ஏக்கள் , எம்.பிக்கள் இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களின் இலக்கு.
பாஜகவின் சித்தாந்தம் மற்றும் திட்டங்களை ஒவ்வொரு மக்களுக்கும் கொண்டு சேர்ப்போம். கட்சியில் பல சீனியர்கள் இருந்தாலும் அனைத்து தலைவர்களையும் அரவணைத்து செல்வேன். திமுகவை எதிர்க்க, பாஜகவின் கொள்கைகளை எடுத்துச் சொன்னால் போதும். பா.ஜ.க சார்பில் சட்டமன்றத்தில் நான்கு உறுப்பினர்கள் இருந்தாலும் கூட, திமுக பேசுகின்ற அனைத்து அரசியலும் எங்களைக் சார்ந்துதான் இருக்கிறது. அதைக் எதிர்க்கும் எங்களின் அரசியலையும் பார்ப்பீர்கள். இது ஆரம்பம் மட்டுமே கடுமையாக உழைப்போம்; கட்சியை வளர்ப்போம்” ஆண்டவன் நம் பக்கம்! என அதிரடியை பேசி பாஜகவினரை உற்சாகப்படுத்தினார். அண்ணமலை அவர்கள்