மேற்கு வங்காளம் கிராமப்புற மாநிலம்.
தமிழகம் கேரளம் போன்று அல்லாமல், கிராமங்கள் நிறைந்த மாநிலம் மேற்கு வங்காளம்.
கொல்கத்தா தவிர கிட்டத்தட்ட மாநகராட்சி இல்லை என்று கூறலாம்.
அசன்சோல் தவிர மீதி எல்லாம் தமிழக நகராட்சிகள் போன்றவை தான் மாவட்ட தலைநகர்களாக உள்ளன.
மாற்றத்தை அங்கு கிராமத்தில் இருந்து தான் ஏற்படுத்த முடியும்.
கம்யூனிஸ்டுகள் கிராமங்களை தான் முதலில் கைப்பற்றின.
மம்தா அப்படியே.
நரேந்திர மோடி, அமித்ஷா, நட்டா என அனைவரும் கிராமங்களை முன்னிறுத்தி தான் சென்று வருகின்றனர்.
அனைவரின் பேச்சுகளில், பயணங்களில், நிகழ்ச்சிகளில் இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், சைதன்ய மகாப்பிரபு, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், தாகூர், மகரிஷி அரவிந்தர் என்று மேற்கு வங்காளத்தில் தோன்றிய மகான்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த படங்களில் இருப்பது பால் இசைக் கலைஞர்கள்.
பாசுதேவ்பால் என்று பிரபலமான பால் இசைக் கலைஞர் தோன்றிய இடம்.
பால் இசை அலாதியானது.
இத்தகைய கலாச்சாரம் கிராமங்களில் மறைந்து விடவில்லை.
மேற்கு வங்காளம் போல்பூர் அமித்ஷா ஊர்வலம்.
அதேபோல் இந்த பேரணி நடந்த போல்பூர் ஒரு விஐபி பாராளுமன்ற தொகுதி.
1984ல் சோம்நாத் சாட்டர்ஜியை மம்தா பானர்ஜி தோற்கடித்தார். அந்த சமயம் தான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியை தோற்கடித்ததால் மம்தா பானர்ஜி ‘ அக்னி கன்யா’ என்று அழைக்கப்பட்டார்.
பின்னர் நடந்த இடைத்தேர்தலில் போல்பூரில் போட்டியிட்டு வென்ற சாட்டர்ஜி தொடர்ந்து 2009 வரை எம்பி ஆக இருந்தார்.
பிறகு இரண்டு தேர்தல்களில் மம்தா கட்சி வெற்றி பெற்றது.
கடந்த தேர்தலில் பாஜக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















