மேற்கு வங்காளத்தில் இப்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரசை விட
பிஜேபியின் கை ஓங்க ஆரம்பித்து விட்ட துஇருந்தாலும் பிஜேபிக்கு அமோக வெற்றிக்கு அதாவது 200+ தொகுதிகளுக்கு மேல் பிஜேபி வெற்றி பெற வேண்டும் என்றால் முஸ்லிம்கள் அதிகம் உள்ள
பகுதிகளில் பிஜேபி வெற்றி பெற்றாக வேண்டும்.
சுமார் 7 கோடி வாக்காளர்கள் உடைய மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் வாக்கு சுமார் 30 சதவீதம் இருக்கிறது.
சுமார் 100 தொகுதிகளில் முஸ்லிம்கள் வாக்கு தான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது
மேற்கு வங்காளத்தில் வருகின்ற தேர்தரில் இதுவரை இல்லாத அளவில் இந்து க்கள்VS முஸ்லிம்கள் என்கிற அளவில்
தான் வாக்குப்பதிவு இருக்கப்போகிறது இந்துக்கள் அதிகளவில் பிஜேபிக்கு வா க்களிக்க இருக்கிறார்கள்.
ஓரளவு இந்துக்களோடு பெருமளவில் முஸ்லிம்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு
வாக்களிக்க இருக்கிறார்கள்.
காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி இந்துக்கள் மற்று ம் வாக்குகளை இழந்து மேற்கு வங்காள
அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போக இருக்கிறார்கள்.
இப்போதைய நிலையில் காங்கிரஸ் இட து சாரி கூட்டணி 20-25 தொகுதிகளை தா ண்ட முடியாது என்கிற நிலைமையே இ
ருக்கிறது.அதிலும் காங்கிரஸ் தான் 15+ தொகுதிகளில் வெற்றி பெற முடியும்.
இடது சாரிகள் கூட்டணி <10 அதாவது 10 தொகுகளை எட்ட முடியாத நிலையில் சிங்கிள் டிஜிட்டில் தான் இருக்கிறது.
பிஜேபி 140-150 தொகுதிகளில் வெற்றிபெறும் நிலையில் இருக்கிறது திரிணா முல் காங்கிரஸ் 130-140 என்கிற நிலையி ல் இருக்கிறது.
இந்த நிலை இனி வரும்
காலங்களில் மாறி திரிணாமுல் காங்கிரஸ் 50-60 தொகுகளில் அடங்கவும் பிஜேபி 210-220 தவகுதிகளை வெல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது.
பிஜேபி 200+ தொகுதிகளை வெல்ல வே
ண்டும் என்றால் முஸ்லிம் வாக்குகள் பிரி
ந்தால் மட்டுமே சாத்தியமாகும்.பீகார் மா
திரியே மேற்கு வங்காளத்திலும் முஸ்லிம்
கள் வாக்குகள் பிரிந்தால் தான் பிஜேபி க்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடை
க்க முடியும் .
அனேகமாக பீகாரில் அசாதுதீன் உவைசி செய்த வேலையை மேற்கு வங்காளத்தி ல் அப்பாஸ் சித்திக் செய்வார் என்றே தெ
ரிகிறது.அப்பாஸ் சித்திக் தான் இப்பொ ழுது மேற்கு வங்காள முஸ்லிம் களின் ஹீரோவாக இருக்கிறார்.இவருக்கு அடு
த்து தான் அசாதுதீன் உவைசி இருக்கி றார்.
புர்புரா செரிப் என்கிற முஸ்லிம் மத வழிபாட்டு தலத்தை நடத்தி வரும் அப்பாஸ் சித்திக் வங்க தேச முஸ்லிம்களின் ஹீரோவாக இருக்கிறார்.
மேற்கு வங்காள முஸ்லிம்களில் ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்கிற முஸ்லிம் வழிபாட்டு அமைப்பு
இருக்கிறது.
இவர்களுக்கு பின்னால் இ ந்திய முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்தை பொறுத்த வரை வங்க தேச முஸ்லிம்கள் தான் இந்திய முஸ்லிம்களை
விட அதிகமாக இருக்கி றார்கள் வங்க தேச முஸ்லிம்கள் வங்க
தேச முஸ்லிம்கள் ஆரம்பித்தில் இடது சாரிகள் ஆதரவாளர்களாக இருந்தார்கள் அதற்கு பிறகு மெல்ல மெல்ல மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்களாக மாறிவிட்டார்கள்.
இந்திய முஸ்லிம்கள் அன்றிலிருந்து இன்று வரை காங்கிரஸ் ஆதரவு நிலையில்
தான் இருக்கிறார்கள்.
1977 க்கு பிறகு இடதுசாரிகளின் வளர்ச்சி 2009 க்கு பிற கு மம்தா பானர்ஜியின் வளர்ச்சி இரண்
டையும் தீர்மானித்தவர்கள் வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்க ள் தான்.
இதுவரை இவர்களுக்கு அதிகாரபூர்வமாக இந்திய குடியுரிமை இல்லை
என்பது வேறு விசயம்.
வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த மடுவா என்கிற தலித் மக்களும்
ஆரம்பத்தில் இடதுசாரிகள் ஆதரவு பிறகு மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக மாறி விட்டார்கள்.
ஆக வங்க தேசத்தில் இருந்து
வந்த முஸ்லிம்களும் இந்துக்களும் தான் மேற்கு வங்காள ஆட்சியை தீர்மானித்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் மம்தா பானர்ஜி பிஜேபியோடு கூட்டணி வைத்து இருந்த பொழு து இந்த மடுவா மக்களை தான் குறி வைத்து அரசியலை செய்து வந்தார்.
அதாவ து மடுவா மக்களுக்கு இந்திய குடியுரிமையை அளிக்க வேண்டும் என்று அவர்களிடையே பிரச்சாரம் செய்து அவர்களி ன் வாக்குகளை பெற்று வளர்ந்து வந்தார்.
மம்தா பானர்ஜியின் வங்க தேச இந்து ஆதரவு அரசியலினால் அவரை விட்டு தள்ளி இருந்தது காங்கிரஸ் ஏனென்றால் இந்திய முஸ்லிம்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்ததால் இடது சாரிகளிடம் இருந்து வங்க தேச இந்துக்களை பிரிக்கும் மம்தா பானர்ஜியின் அரசியலை காங்கிரஸ் வேடிக்கை பார்த்து கொண்டு மம்தாவை விட்டு விலகியே இருந்தது.
2008 ம் ஆண்டு தான் இடதுசாரிகள் ஆ ட்சி இனி அவ்வளவு தான் என்று மேற்கு வங்காள மக்களை நினைக்க வைத்த வருடம். அந்த கால கட்டத்தில் நந்தி கிராமம் சிங்கூர் பிரச்சினைகள் மூலமாக
இடதுசாரிகள் மீது மேற்குவங்காள மக்க ள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தார்கள்.
மேற்கு வங்காள மக்கள் தங்களின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள் என்று தெரிந்தும் இடதுசாரிகள் 10 பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்தை எதிர்த்து அப்போ
தைய மன்மோகன்சிங் ஆட்சியை கவிழ்க்க நினைத்து அவர்களின் வாழ்வை அவர்களாகவே முடித்து கொண்டார்கள்.
2008ல் மத்திய காங்கிரசின் ஆட்சியை கவிழ்க்க இடதுசாரிகள் நடத்திய கேவலமான செயலினால் காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ள மம்தா பானர்ஜி
யுடன் கூட்டணி வைத்துக் கொண்டு 2009 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது.
அந்த தேர்தலில் இருந்து தான் முதன் முதலாக இடதுசாரிகளுக்கு மேற்கு வங் காளத்தில் வீழ்ச்சி ஆரம்பமாகியது.
அந்த நிலையிலும் வங்க தேச முஸ்லிம்கள் இடதுசாரிகளின் ஆதரவாளர்களாகவே இருந்தார்கள்.
2011ல் இடதுசாரிகள் ஆட்சியை
இழந்த பொழுதும் வங்க தேச முஸ்லிம்க ள் இடதுசாரிகள் ஆதரவு நிலையிலேயே
இருந்தார்கள்.
மம்தா பானர்ஜி முதல்வராக வந்த பிறகு இடதுசாரிகளை மேற்கு வங்காள அரசியலில் இருந்து ஓரம் கட்ட பிஜேபியை வளர்க்க நினைத்தார்.
இதற்காகவே அவர் மேற்கு வங்காள அரசியலில் பிஜேபி எதிர்ப்பு அரசியலை முன் வைத்து முஸ்லிம் ஆதரவு நிலைப்பாட்டை மேற் கொண்டார்.
இதனால் இடதுசாரிகள் ஆதரவு நிலை யில் இருந்த முஸ்லிம்கள் அப்படியே மம்தா பானர்ஜி ஆதரவாளர்களாக மாறினார்கள்.
2014 லோக்சபா தேர்தலில் பிஜேபி
மேற்கு வங்காளத்தில் உள்ள வங்க தேச மடுவா இன இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவோம் வங்க தேச முஸ்லிம்களை கட்டுப்படுத்த குடியுரிமை சட்டத்தை கொண்டு வருவோம் என்றது.
இதனால் வங்கதேச முஸ்லிம்கள் போராட்டங்கள் கலவரம் என்று ஈடுபட அதை மம்தா அரசு வேடிக்கை பார்க்க மெல்ல
மெல்ல கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சியில் இருந்த இந்துக்கள் பிஜேபியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.
இதற்கு உதாரணமாக காந்தி தக்சின் சட்டமன்ற தொகுதியையே எடுத்துக்கொள்வோம்.
2011 சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த பொழுது காந்தி தக்சின் தொகுதியில் திரிணாமு ல் காங்கிரஸ் 86,933 வாக்குகளை பெற்றுஇருந்தது இடதுசாரிகள் 58,296 வாக்குகளை பெற்று இருந்தார்கள். பிஜேபி 5,004
வாக்குகளை பெற்று இருந்தார்கள்.
2016 சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்ற பொழுது இதே காந்தி தக்சின் தொகுதி யில் திரிணாமுல் காங்கிரஸ் 93,359 வா
க்குகளும் இடதுசாரிகள் காங்கிரஸ் கூட்ட ணிக்கு 59,469 வாக்குகளும் பிஜேபிக்கு 15,223 வாக்குகளும் பெற்றது.
2017 காந்தி தக்சின் சட்டமன்ற இடைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி க்கு 95,369. வாக்குகளும் பிஜேபி் 52,843 வாக்குகளும் இடதுசாரிகள உக்கு 17,423 வாக்குகளும் கிடைத்து இருந்தது.
இதன் மூலமாக மம்தா பானர்ஜி VS பிஜே பி அரசியல் மூலமாக பிஜேபி எப்படி வளர்நதது என்பதையும் இடதுசாரிகள் எப்படி அட்ரஸ் இழந்து போனார்கள் என்பதை யும் அறிந்து கொள்ளலாம்.
எழுதி வை த்து கொள்ளுங்கள் இதே காந்தி தக்சின்
தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகள் 5000 ஓட்டுக்களை கூடபெற முடியாது.
இந்த அளவிற்கு இடதுசாரிகள் ஆதரவு வாக்குகளாக இருந்த முஸ்லிம்கள் திரிணாமு ல் காங்கிரஸ் ஆதரவாளர்களாகவும் இந்துக்கள் பிஜேபிக்கு ஆதரவாகவும் இப்பொழுது இருக்கிறார்கள்.
இந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்த லில் பிஜேபி மேற்கு வங்காளத்தில் குடியு ரிமை சட்டத்தை அமல்படுத்துவது பற்றி
யே பிரச்சாரத்தை முன் வைக்கும்.
இத ற்கு மம்தா பானர்ஜி கடுமையான எதிர்ப்பு அளிக்கும் பொழுது அவரிடம் உள்ள
வங்கதேச மடுவா இன மக்கள் பிஜேபி யை நோக்கி முழுமையாக நகர்ந்து விடுவர்கள்.
அதே நேரத்தில் வங்க தேச முஸ்லிம்கள் மம்தா பானர்ஜியை விட்டு வெளியே கொண்டு வர அப்பாஸ் சித்திக் களம் கா ண இருக்கிறார்.இவர் நிச்சயமாக மம்தா பானர்ஜிக்கு கிடைத்து வந்த வங்கதேச முஸ்லிம்கள் வாக்குகளை நிச்சயமாக காலி செய்யும் என்பதால் முஸ்லிம்கள் அ
திகம் உள்ள பகுதிகளிலும் அதாவது பீகாரில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள சீமாஞ்ச ல் ரீஜனில் அசாதுதீன் உவைசியின் மூல மாக பிஜேபி அதிகமாக வெற்றி பெற்றது மாதிரி மேற்கு வங்காளத்திலும் வெற்றிபெறும்.
அப்பாஸ் சித்திக் அசாதுதீன் உவைசியுட ன் கூட்டணி வைக்கும் முயற்சி யில் இருக்கிறார் .அதாவது முஸ்லிம்கள் அதிகம் உள்ள 100 தொகுதிகளில் 50:50 அடிப்ப டையில் போட்டியிட இருக்கிறார்கள்.
இது மட்டும் நடந்து விட்டால் மேற்கு வங்காள
த்தில் பிஜேபி 220+ உறுதியாகி விடும்.
அதே நேரத்தில் இடதுசாரிகள் லோக்சபா தேர்தல் மாதிரியே சட்டமன்ற தேர்தலிலு ம் வாஷ்அவுட்டாகி இடதுசாரிகள் இல்லா த மாநிலமாக மேற்கு வங்காளம் உருவெடுக்கும்.
இடதுசாரிகள் இல்லாத மேற்கு வங்காளம் இடதுசாரிகள் இல்லாத இந்தியா மக்களுக்கு நல்லது தானே.