1) பால் பாக்கெட்டுகளை நன்கு கழுவிய பின் வீட்டிற்குள் கொண்டு வரவும். சாப்பிடும் முன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவும்.
- செய்தித்தாள்களை வாங்குவதை நிறுத்திக்கொள்வது நல்லது. தவிர்க்க முடியாமல் வாங்கவேண்டிய சூழல் இருந்தால் சூரிய வெளிச்சத்தில் ஒருபகல் நன்கு காயவைத்து அந்த தாளில் துளியளவும் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதி செய்த பின். அடுத்த நாள் அதை படிக்கலாம். செய்திகளை ஒருநாள் தாமதமாக படிப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை.
3.அஞ்சல்கள், கடிதங்கள், பார்சல்களை வைப்பதற்கு தனியான கலன்களை ( tray) பயன்படுத்துங்கள் அவற்றை 24 மணி நேரத்திற்கு பின்னரே எடுக்க வேண்டும். அதுவரை அவற்றைத் தொட வேண்டாம்.
- தலைவாசல் கதவு, கைப்பிடி ஆகியவற்றை தேவையில்லாமல் யாரையும் தொட அனுமதிக்க வேண்டாம் நீங்களும் அவற்றைத் தொட்டுவிட்டால் கைகளை சுத்தமாக கழுவவும். அழைப்புமணிக்கான பொத்தான்களை பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யவும்.
5.ஆன்லைனில் எதையும் வாங்க வேண்டாம். முக்கியமாக உணவுப்பொருட்களை.
6.காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிய பின் நன்றாக சுத்தம் செய்தபின் வீட்டிற்குள் கொண்டு செல்லவும்.
7.ரிமோட், தொலைபேசி, கைபேசி போன்ற கைகளால் தொட்டு பயன்படுத்தும் மின்னனு பொருட்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பாதுகாப்பான முறையில் சோப்பு ஆயில் போன்றவற்றால் சுத்தம் செய்யவும்.
- நீங்கள் வீட்டில் இருந்தாலும் அலுவலகங்களில் இருந்தாலும் கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை நன்றாக சுத்தமாக கழுவுங்கள்.
9.பொதுப்போக்குவரத்தை முற்றிலும் தவிருங்கள் ஓலா,உபர் போன்றவற்றின் வாடகை கார்கள் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் பயணத்தை மேற் கொள்ளுங்கள்.
10.உடற்பயிற்சிகூடங்கள், நீச்சல்குளங்கள் போன்றவற்றைத் தவிர்க்கவும். உடற்பயிற்சியை தவிர்க்க இயலாதவர்கள் நல்ல காற்றோட்டமுள்ள உலர்ந்த இடத்தில் போதுமான பாதுகாப்பை உறுதி செய்தபின் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- நடனம், இசை போன்ற பயிற்சி வகுப்புகளையும் பள்ளிகளில், வீடுகளில் நடத்தப்படும் சிறப்பு மற்றும் மாலை நேர வகுப்புகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
- அலுவலகம், கடைவீதி போன்ற இடங்களுக்கு வீட்டின் வெளியே சென்று வருபவர்கள் வீட்டிற்குள் வரும்போது துணிகளை களைந்து துவைக்க தண்ணீரில் வைத்து விட்டு. கைகளை சுத்தமாக கழுவிவிட்டு வெந்நீரில் வாய் கொப்பளித்து விட்டு வீட்டிற்குள் நுழையவும்.
13.மிகவும் முக்கியமானது உங்கள் கைகளால் முகம், கண், வாய், மூக்கு போன்றவற்றை தேவையில்லாமல் தொடாதீர்கள் தவிர்க்க முடியாத சூழலில் கைகளை நன்றாக சுத்தமாக கழுவிய பின் தொடவும்.
- மூத்த குடிமக்கள் வழக்கமாக நடைபயிற்சி போன்றவற்றிற்கு கூட்டமாக செல்வதைத் தவிர்க்கவும் தேவைப்பட்டால் உடற்பயிற்சி களையே முற்றிலும் தவிர்க்கவும்.
- உங்கள் வீட்டிற்கு வழக்கமான வேலைகளுக்காக வரும் வெளியாட்களை கூடுமானவரை தவிர்க்கவும் தவிர்க்க முடியாத சூழலில் கை கால்களை நன்றாக கழுவிய பின் போதுமான பாதுகாப்புடன் வீட்டிற்குள் அனுமதிக்கவும்.
- தும்மும்போதும் இருமும் போதும் கைக்குட்டையால் வாயையும் மூக்கையும் மூடிக் கொள்ளவும். (அதற்காக வாயை இரு உதடுகளையும் சேர்த்து இருக்கமாக மூடிக் கொள்ளக்கூடாது) வாய், மூக்கு வழியாக சளி , உமிழ்நீர் போன்றவை காற்றில் கலந்து விடாதபடி துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது கூடிய விரைவில் நாம் பாதிப்பின் மூன்றாம் நிலைக்குள் செல்லவிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர் களிடமிருந்து நேரடி சமூகத் தொடர்பை துண்டித்துக் கொள்வதுதான் தற்போதைய தேவை.
கிருமி தொற்று சங்கிலியை 15 நாட்களுக்கு முற்றிலுமாக உடைத்து விட்டாலே போதும்.