நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் என்னாச்சு ! மாணவர்கள் பாதிக்காத வகையில் நீட் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் அந்தர் பல்டி அடித்த உதயநிதி!

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் முக்கியமான ஒன்று நீட் தேர்வு ரத்து . திமுகவனின் பிரச்சார முழக்கம் நீட் தேர்வு ரத்து, தான் சட்டமன்ற கூட்ட தொடரின் முதல் கையெழுத்து என திமுக தலைவர் பிரச்சாரம். நீட் தேர்வை எப்படி ரத்துசெய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அந்த ரகசியத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்து காட்டுகிறோம். அடிமை அரசாக இருக்காது என உதயநிதியின் பில்டப் வேற லெவலில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நீட் ரத்து செய்வார்கள் என மக்களை நம்ப வைத்தார்கள் திமுகவினர்.

நீட் தேர்வை ரத்து செய்வது தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது இல்லை என்று பலர் கூறி வந்தபோதிலும் திமுக அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று வாக்குறுதியை தொடர்ந்து வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சிக்கும் வந்துவிட்டது நீட் தேர்வை ரத்து செய்வார்கள் என அனைவரும் உற்று நோக்கும் வகையில் நீட் தேர்வு சாதக பாதகங்களை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்தலைமையில் குழு அமைத்து நீட் தேர்வினை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகததில் ஏ.கே.ராஜன் குழுவிடம் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கையை திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்; நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து அறிக்கை ஏ.கே ராஜன் குழுவிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். ஏ.கே.ராஜன் குழு வெளியிட உள்ள அறிக்கையை கலந்து ஆலோசித்து அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று கூறிய அவர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தி.மு.க அரசின் நிலைப்பாடு அனா மழுப்பலாக பதில் அளித்தார். ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு என அறிவித்துள்ளார்கள் இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மாணவர்கள் பாதிக்காத வகையில் நீட் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். அப்போ திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து என்ற தேர்தல் அறிக்கை மற்றும் நீங்கள் வைத்திருந்த ரகசியம் என்ன ஆச்சு உதய் என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Exit mobile version