இன்றைய காலகட்டத்தில் உலகமே பாராட்டும் தலைவராக உருவெடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி . கொரோன தாக்குதலை இந்தியாவில் பரவவிடாமல் தடுக்க பல்வேறு 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உலக நாடுகளை திரும்ப பார்க்க வைத்தார் மோடி. மிக பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு ஒரு நாள் இரவில் ஊரடங்கை கடைபிடிக்க தொடங்கியது. இதுவும் உலகத்திற்கு ஆச்சர்யம். 130 கோடி மக்கள் ஒருவர் பின்னடை நிற்பதை கண்டு ஐக்கிய நாடுகள் சபை கொரோனவை கட்டுப்படுத்த இந்தியவை பார்த்து நடந்து கொள்ளுங்கள் என சொன்னது.
இந்த நிலையில் கொரோனவுக்கு ஓரளவு கைகொடுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னணி நாடாகும். இந்த மாத்திரையை அமெரிக்காவுக்கு வழங்குமாறு டிரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால் நம்மூர் எதிர்கட்சிகளோ டிரம்ப் மிரட்டினார் என இந்தியாவில் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு கைகொடுத்துள்ள ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா வழங்கியதற்கு டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடிக்கு பல முறை நன்றி தெரிவித்துள்ளார்.
மட்டுமல்ல பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவும் நரேந்திர மோடியின் முயற்சிகளைப் பாராட்டினார், மேலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை சஞ்சீவினிக்கு இணையாக பாராட்டியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் மோடி தலைமை தாங்குவதால் #ModiLeadingTheWorld எனும் ஹாஷ்டாக் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஒருபடி மேலே சென்று வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இதுவரை 16 பேரை மட்டுமே பின் தொடர்ந்து வந்தது. அதுவும் அமெரிக்க அரசு சம்பந்தப்பட்டவர்களை மட்டுமே. அதை பின் தொடர்பவர்கள் 20 லட்சத்திற்கும் மேல். இப்போது மொத்தம் 19 பேரைப் பின்தொடர்கிறது வெள்ளை மாளிகை ட்விட்டர் கணக்கு. அந்த முக்கியமான 19 பேரில் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரின் கணக்குகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் தவிர்த்து அமெரிக்கா கேபினட் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கணக்குகளை பின்பற்றுகிறது. இது போக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக கணக்கையும் பின்பற்றுகிறது.
அமெரிக்க அரசு வட்டாரங்கள் தவிர்த்து மொத்தம் 4 வெளிநாட்டு ட்விட்டிர் கணக்குகளை தற்போது பின்பற்றுகிறது. அந்த நான்கும் இந்தியா தொடர்புடையது தான் இது தான் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த காரணம். இந்தியாவின் குடியரசு தலைவர், மோடியின் தனிப்பட்ட மற்றும் பிரதமர் அலுவலக கணக்குகளை பின்பற்றும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பின்தொடர்ந்துள்ளது. அதே போல் இந்திய பிரதமர் மோடியின் அலுவலக ட்விட்டர் கணக்கையும் பின்பற்றுகிறது. அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாட்டை சேர்ந்த 3 ட்விட்டர் கணக்குகளை மட்டுமே வெள்ளை மாளிகை பின்பற்றுகிறது.