அண்ணாமலை டெல்லியில் கொடுத்த உத்தேச தமிழக வேட்பாளர்கள் யார் யார்? சீக்ரெட்டை உடைத்த கமலாலயம்?

Annamalai

Annamalai

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தேசிய அளவில் 195 வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் முன்னணியில் உள்ளது. பல மாநிலங்களில் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் தயார்நிலையில் வைத்துள்ளது.இன்னும் இரு தினங்களில் வெளியிடப்படலாம் என்ற நிலையில் உள்ளது. இன்னும்இன்னும் தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில் தேர்தல் ரேஸில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க அ.தி.மு.க போன்ற திராவிட கட்சிகள் கூட்டணி அமைக்க போராடி வரும் நிலையில் பா.ஜ.க நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட கூடிய உத்தேச வேட்பாளர் பட்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்தில் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியன் கட்சி, தேவநாதன் யாதவ் கட்சி சமத்துவ மக்கள் கட்சி தமிழருவிமணியனின் காமராஜரின் மக்கள் இயக்கம், உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மேலும் ஓ பன்னீர்செல்வம், அமுமுக வுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நேற்று டெல்லி சென்றுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை கையில் குறிப்பிட்ட ஒரு சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துள்ளதாகவும் தெரிகின்றது. யார் யார் வேட்பாளர் லிஸ்டில் உள்ளார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

1.வடசென்னை பகுதியில் பாஜக மாநில துணை தலைவர் பால் கனகராஜ் போட்டியிடலாம் என தெரிகின்றது. 2.தென் சென்னை தொகுதி பாஜக மாநில செயலாளர் SG சூர்யா ரேஸில் முன்னணியில் உள்ளார் மேலும் முக்கிய பிரபலங்களும் ரேஸில் உள்ளார்கள். 3.மத்திய சென்னையில் பா.ஜ.க மாநிலச் செயலாளர் வினோஜ் ப செல்வம் அல்லது பாமக கூட்டணிக்கு வந்தால் பாமகவுக்கு ஒதுக்கப்படும். சென்னையில் ஒரு தொகுதியில் நடிகை குஷ்புவிற்கு வழங்க வாய்ப்புள்ளது.

4.கஞ்சிபுரம் தனித் தொகுதியில் பாஜக பட்டியல் அணி நிர்வாகி ஒருவரும் கூட்டணி கட்சியும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் தெரிகின்றது. 5 திருவள்ளுவர் தொகுதியில் பா.ஜ.க பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி ரேஸில் உள்ளார். மேலும் அந்த மாவட்டத்தை சேர்ந்த சில நிர்வாகிகளும் கேட்டுள்ளார்கள்.

6.வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என அவர் முன்பே அறிவித்திருந்தார். 7. ஆரணி தொகுதியில் பா.ம.க கூட்டணி அமைத்தால் பாமகவிற்கு ஒதுக்க வாய்ப்புள்ளது பாஜக சார்பில் இதுவரை வேட்பாளர்கள் முடிவு செய்யவில்லை,.

8.திருவண்ணாமலை தொகுதியில் வேட்பாளரை முடிவு செய்யவில்லை பாமக கூட்டணி அமைத்தால் அந்த தொகுதி அவர்களுக்கு செல்லலாம் , 9. அரக்கோணம் தொகுதியில் பாஜக மாநில நிர்வாகி ஒருவரின் பெயர் நிற்பதற்காக அடிபடுகிறது பாமகவுடன் கூட்டணி அமைத்தால் தொகுதி அவர்களுக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

  1. ஸ்ரீபெரும்புதூர் பகுதி தொழிற்சாலை அமைந்த பகுதி என்பதால்அங்கு பா.ஜ.கவின் கே.டிஇராகவன் நிற்கலாம். அல்லது பாமகவுக்கு ஒதுக்கப்பட்டால் முன்னாள் அமைச்சர் மூர்த்தி போட்டியிட வாய்ப்புகள் உள்ளது.இல்லை அமுமுக சார்பில் தாம்பரம் நாராயணன் நிறுத்தப்படலாம்.
  2. விழுப்புரம் தனி தொகுதி என்பதால் இதற்கு முன்பே போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த தேசிய தூய்மை பணியாளர் வாரிய தலைவர் வெங்கடேசன் போட்டியிட வாய்ப்பு உள்ளது பாமக அல்லது தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் இந்த தொகுதி அவர்களுக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.
  3. கள்ளக்குறிச்சி தொகுதி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுள்ளனர் இல்லை என்றால் பாஜக சார்பில் மாநிலத் துணைத் தலைவர் ஏ ஜி சம்பத் வாய்ப்பு கேட்டு இருப்பதாகவும் அவர் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருந்தால் அவருக்கு பதில், சேலம் மாவட்டத்தை சார்ந்த தலைவர் ஒருவர் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
  4. கடலூர் தொகுதியை பொருத்தவரை மாநில நிர்வாகி அஸ்வத்தாமன் கேட்டு வருகிறார் . பாமக உடன் கூட்டணி அமைத்தால் அவர்களுக்கு தொகுதி செல்ல வாய்ப்புகள் அதிகம்.
  5. சிதம்பரம் தனி தொகுதி பொருத்தவரை திமுக சார்பில் கூட்டணி கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுவார்அவரை எதிர்த்து நிற்பதற்கு தகுதியான நபராக கடந்த சில வருடங்களாக பாஜக சார்பில் கூறப்படும் நபர் பட்டியல் அணியின் மாநில தலைவர் பல்வேறு போராட்டங்களை நடத்திய தடா. பெரியசாமி போட்டியிடுவார் என தெரிகின்றது.
  6. சேலம் தொகுதி பாமகவுடன் கூட்டணி அமைத்தால் அவர்களுக்கு செல்லும் இல்லையெனில் பாஜக மாநில நிர்வாகி கேட்டுள்ளார். 16. தர்மபுரி தொகுதி பாமக சார்பில் கூட்டணி அமைத்தால் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு ஒதுக்கப்படும்.
  7. கிருஷ்ணகிரி தொகுதியில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரையின் பொறுப்பாளரும் மாநிலத் துணைத் தலைவருமான நரேந்திரன் அல்லது நரசிம்மன் போட்டியிட வாய்ப்பு உள்ளது. 18. கரூர் தொகுதியை பொருத்தவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புகள் இருக்கின்றது, அல்லது மாவட்ட தலைவர் செந்தில்நாதன் போட்டியிட வாய்ப்புகள் இருக்கின்றது.
  8. நாமக்கல் தொகுதியை பொருத்தவரை முன்னாள் எம்பி மாநிலத் துணைத் தலைவருமான கேபி ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது. 20. பொள்ளாச்சி தொகுதியை பொறுத்தவரை மாவட்ட தலைவர் வசந்த குமார் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது.
  9. கோவை தொகுதியை பொறுத்தவரை கமல் போட்டியிட்டால் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ போட்டியிட வாய்ப்புகள் உள்ளது மாநில நிர்வாகிகளும் ரேஸில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  10. நீலகிரி தொகுதியை பொறுத்தவரை முன்னாள் துணைசபாநாயகர் விபி துரைசாமியின் மகன் பிரேம்குமார் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது.23. திருப்பூர் தொகுதி பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகம் உள்ள தொகுதி என்பதால் பாஜக பொதுச்செயலாளர் AP முருகானந்தம் அல்லது இந்து முன்னணி தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம் போட்டியிடலாம்.
  11. ஈரோடு தொகுதி பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் அதிகம் உள்ள தொகுதயில் பாஜகவின் விவசாய அணி தலைவர் GK நாகராஜ் போட்டியிடலாம். 25. திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுத்தவரையில் திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூரியா கேட்டுள்ளார். அதேபோல் அமுமுகவும் திருச்சி தொகுதியை கேட்டுளளர்கள். 26.திண்டுக்கல் தொகுதி பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் அணி கேட்டுளர்கள்.

27.தேனி தொகுதி பொறுத்தவரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி ரவீந்திரநாத் பாஜக கூட்டணியில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது. 28. மதுரை தொகுதி பாஜகவின் பாஜக சார்பில் இந்த முறை தேசிய பொதுக்குழு உறுப்பினரும், மதுரை கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஏ.ஆர் மகாலட்சுமி போட்டியிடலாம்.

29.சிவகங்கை தொகுதியை பொருத்தவரை அமமுக கட்சியுடன் கூட்டணி உறுதியானால் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்புள்ளது, இல்லையென்றால் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, மாவட்ட தலைவர் மேப்பல் சக்திவேல் உள்ளிட்டவர் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது.

30.தஞ்சாவூர் தொகுதியில் பாஜகவுடன் கூட்டணி அமைந்தால் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கேட்டுள்ளார். ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் GK வாசன் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளது.

31.நாகபட்டினம் தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அல்லது மாவட்ட தலைவர் அகோரம் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது 32.மயிலாடுதுறை தொகுதியும் இதுவரை கூட்டணி கட்சிகள் முடிவாகதால் வேட்பாளரும் இறுதி செய்யப்படவில்லை.

33.பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தவரை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் நிற்பார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 34. திருநெல்வேலி தொகுதி பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நாயினார் நாகேந்திரன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது.

35.தென்காசி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை கட்சியின் பிரிவின் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி போட்டியிட வாய்ப்புகள் உள்ளது தற்பொழுது சரத்குமார் கட்சி இணைந்ததால் அவர்களும் கேட்க ஒரு வாய்ப்பு உள்ளது.

36.ராமநாதபுரம் தொகுதியை பொருத்தவரை அங்கு கருப்பு முருகானந்தம் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். 37.தூத்துக்குடி தொகுதியை பொருத்தவரை முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா தொகுதியை கேட்பதாக தெரிகின்றது, சரத்குமார் அந்த தொகுதியும் கேட்பதற்கான வாய்ப்பு உள்ளது. 38.விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை பாஜக பொதுச்செயலர் ராம சீனிவாசன் ரேஸில் முன்னணியில் உள்ளார்.

  1. கன்னியாகுமரி தொகுதி பொறுத்த வரை பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில் அவருக்கு வேறு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
Exit mobile version