Friday, March 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

செனாப் பாலம் 17 ஆண்டுகளாக களத்தில் களமாடிய பெண் சிங்கம் மாதவி லதா யார்..? உலக நாடுகள் தேடும் இந்தியாவின் இரும்பு பெண்மணி!

Oredesam by Oredesam
June 8, 2025
in இந்தியா, செய்திகள்
0
chenap bridge

chenap bridge

FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு – காஷ்மீரில், உலகின் மிக உயரமான, செனாப் ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகள் குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகி ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய திட்டங்களைத் திறந்து வைத்தார். அதில் முதன்மையானது மற்றும் முக்கியமானது செனாப் பாலமாகும். உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான இது, இந்தியப் பொறியியல் துறையின் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த பாலத்தைத் திறந்து வைத்தார்.

பஹல்கம் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி காஷ்மீருக்குச் சென்று. பாலத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, பாலத்தின் மீது நமது மூவர்ணக்கொடியுடன் சிறிது தூரம் நடந்தார். இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரைப் பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமிக்க முயலும் நிலையில், அதற்கு அனுப்பப்பட்ட ஒரு மெசேஜாகவே இது பார்க்கப்படுகிறது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம். நில அதிர்வு மற்றும் பலத்த சூறாவளிக் காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.சுமார் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரெயில் மற்றும் வளைவு பாலமாகும். இது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரமும், பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரமும் கொண்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8 அளவு வரை நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் கொண்டது

செனாப் நதியின் ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படாமலும் கட்டுமானம் முடிக்கப்பட்டிருக்கிறது. சாலை இணைப்பு எதுவும் இல்லாத காரணத்தால், மிகப்பெரிய இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் அந்த இடத்திற்கு கொண்டு செல்வதில் மற்றொரு முக்கிய சவாலாக இருந்தது. பாலத்திற்காக 28,660 மெட்ரிக் டன் எக்கு பயன்படுத்தப்பட்டு, 26 கிலோ மீட்டர் நீளமுள்ள போக்குவரத்துக்கான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிக்கலான கட்டடங்களையோ அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களையோ 3டி வடிவத்தில் வடிவமைக்கும் டெக்லா எனும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

120 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியதாக செனாப் ரயில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் பயணிக்க முடியும் திறனுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 8 ரிக்டர் அளவுகோல் வரையிலான பூகம்பங்களை தாங்கும்.பாலத்திற்கு எந்த சேதமும் ஆகாது. 40 டன் டிஎன்டி வெடிப்புகளை தாங்கும் சக்தியும் கொண்டது. இந்தியாவின் மிகவும் சிக்கலான மற்றும் தனிமையான புவியியில் பகுதியில் கட்டப்பட்டுள்ள செனாப் ரயில் பாலம் பொறியியல் துறையில் ஓர் அற்புதமாக பார்க்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது ரெயில்கள் செல்லும் போது சாகச பயணம் போல இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பாலம் பயன்பாட்டுக்கு வருவதால் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செனாப் ரயில் பாலத்தின் வெற்றிகரமான கட்டுமானத்திற்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர், பேராசிரியை மாதவி லதா.பெங்களூரில் உள்ள, ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையான இவர், செனாப் ரயில் பால திட்டத்தில், புவி தொழில்நுட்ப ஆலோசகராக, 17 ஆண்டுகள் பணிபுரிந்தார்.பாலத்தின் ஒப்பந்ததாரரான, ஆப்கான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய அவர், நிலப்பரப்பால் ஏற்படும் தடைகளை மையமாகக் கொண்டு கட்டமைப்பின் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்டார்.

செனாப் ரயில் பாலத்தை கட்டுவதற்கு சவாலான நிலப்பரப்பு, வானிலை, தொலைதுார இருப்பிடம் ஆகியவை சவாலாக இருந்தன.ஆனால், பேராசிரியை மாதவி லதா தலைமையிலான குழுவினர், அனைத்து தடைகளையும் கடக்க சிறந்த அணுகுமுறைகளை தயாராக வைத்திருந்தனர். அயராது உழைத்த இந்த குழுவினர், பாறைகளின் தன்மைகள், வழித்தடங்களை கண்டறிந்தனர்.

யார் இந்த மாதவி லதா?பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியையான மாதவி லதா, 1992ல், ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலையில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக்., பட்டம் பெற்றார். 2000ல், ஐ.ஐ.டி., -சென்னையில் புவி தொழில்நுட்ப பொறியியலில் அவர் முனைவர் பட்டம் பெற்றார். பல்வேறு விருதுகளை பெற்ற அவருக்கு, 2021ல், இந்திய புவி தொழில்நுட்ப சங்கத்தால், சிறந்த பெண் புவி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டது. 2022ல், இந்தியாவின் ஸ்டீம் நிறுவனத்தில், சிறந்த 75 பெண்களில் ஒருவராக இடம்பிடித்தார்.

பாலம் கட்ட உதவிய குதிரை, கழுதைகள்: செனாப் பாலத்தை கட்​டிய அப்​கான்ஸ் நிறுவன செய்​தித் தொடர்​பாளர் கூறிய​தாவது: பாலம் கட்​டு​மான பணி​கள் தொடங்​கிய​போது பெரும் சவால்​களை சந்​தித்​தோம். பொறியாளர், தொழிலா​ளர்​களை குதிரைகள், கழுதைகள் மூலம் அழைத்து சென்​றோம். கட்​டு​மான உபகரணங்​கள், கட்​டு​மான பொருட்​களை எடுத்​துச் செல்​ல​வும் குதிரைகள், கழுதைகளை பயன்​படுத்​தினோம்.

இதன்​மூலம் முதல்​கட்​ட​மாக கட்டுமான பணி​யிடத்​துக்கு செல்ல தற்​காலிக​மாக சாலைகளை அமைத்​தோம். அதன்​ பிறகே கட்டு​மான பணி​கள் வேகம் பெற்​றன. எங்​களோடு இணைந்து உழைத்த குதிரைகள், கழுதைகளுக்​கும் நன்​றிக்​கடன் செலுத்த கடமைப்​பட்​டிருக்​கிறோம். இவ்​வாறு அப்​கான்ஸ் நிறுவன செய்​தித் தொடர்​பாளர் தெரி​வித்​தார்.

அப்​கான்ஸ் துணைத் தலை​வர் கிருஷ்ண​மூர்த்தி சுப்​பிரமணி​யன் கூறும்​போது, “செ​னாப் ரயில் பாலம், பொறியியலின் அதிச​யம் ஆகும். கட்​டு​மான துறை​யில் இந்​தி​யா​வால் எதை​யும் சாதிக்க முடி​யும் என்​ப​தற்கு இந்த பாலம் உதா​ரணம் ஆகும். உலகின் மிக உயர​மான கிரேன்​கள், அதிநவீன கட்​டு​மான கருவி​களை பாலம் கட்​டும் பணிக்கு பயன்​படுத்​துகிறோம்’’ என்றார்.

அப்​கான்ஸ் நிறுவன துணை நிர்​வாக இயக்​குநர் கிரிதர் ராஜகோ​பாலான் கூறும்​போது, “காற்​றின் அழுத்​தம், பாலத்​தின் பாரத்தை தாங்​கும் வகை​யில் வளைவு வடி​வில் இரும்பு தூண்​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. ரயில்வே கட்​டு​மானத்​தில் இந்த தொழில்​நுட்​பம் முதல்​முறை​யாக பயன்​படுத்​தப்​பட்டு இருக்​கிறது’’ என்று தெரி​வித்​தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உத்திரபிரதேச ஹத்ராஸ் வழக்கு நான்கு பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா PFI உறுப்பினர்கள் கைது.!

உத்திரபிரதேச ஹத்ராஸ் வழக்கு நான்கு பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா PFI உறுப்பினர்கள் கைது.!

October 7, 2020
கேரளா கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு – பலி 3 ஆக அதிகரிப்பு ஒருவர் கைது

கேரளா கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு – பலி 3 ஆக அதிகரிப்பு ஒருவர் கைது

October 30, 2023
பாயும் இந்தியா! பம்மும் சீனா ! பிரச்சனைகளை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் சீனா அறிக்கை!

சீனாவின் பிரச்சனையை தீர்ப்பது மோடி தான் 72.6% இந்திய மக்கள் முழு நம்பிக்கை! சி-வோட்டர் கருத்து கணிப்பு

June 25, 2020
12 வயது சிறுமியிடம் சில்மிஷம்… ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

12 வயது சிறுமியிடம் சில்மிஷம்… ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

June 25, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x