அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என மூத்த அமைச்சர்கள் ஓபிஎஸ், இபிஸிடம் மாறி மாறி ஆலோசனையால் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இன்று நாட்டின் 74வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொடியேற்றி கொண்டாடப்பட்டுவந்த நிலையில் ,சென்னையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் 10 க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆசிபெற்ற ஓ.பி.எஸ் தான் முதல்வராக வர வேண்டும் என பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால் ஏற்பட்ட சர்ச்சையால் பின்னர் அந்த நோட்டீஸ்கள் அகற்றப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2021 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, தமிழகத்தில் முக்கிய விவாதமாகி வருகிறது.. இந்த நிலையில் தேனி மாவட்டத்தின் பல இடங்களில் அம்மாவின் ஆசிபெற்ற ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் சிவி சண்முகம், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்களுடன் தற்போது துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டது. இந்த ஆலோசனைக்குப்பின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதனைத்தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்தார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பசுமை வழிச்சாலை

அ.தி.மு.க. வில் தற்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அடிக்கடி சர்ச்சைகள் குறித்து வெளியிடப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார். வரும் சட்டமன்ற தேர்தலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தான் அதிமுக எதிர்கொள்ளும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை கட்சி மேலிடம் முடிவெடுத்து அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமாரும். அதிமுக வில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனஅக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியிருந்தனர்.

இப்படி அடுத்தடுத்து மூத்த அமைச்சர்கள் குறிப்பிட்டு வந்த நிலையில் இன்று தேனி மாவட்ட பகுதியில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆசிபெற்ற ஓ.பி.எஸ் தான் முதல்வராக வர வேண்டும் என பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை எழுந்துள்ளது.

Exit mobile version