பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் தவிர மற்றவர்களுக்கு ஏன் விநாயகர் சதுர்த்தி பிடிக்காது? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

பாஜக , ஹிந்து இயக்கங்கள் தவிர்த்து வேறு எந்தக் கட்சிக்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பிடிக்காது…அதுவும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது பிடிக்கவே பிடிக்காது…

காரணம் , ஆனானப்பட்ட வெள்ளையனையே நாட்டைவிட்டு விரட்ட மூல காரணமாக அமைந்தவர் பிள்ளையார்…பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைத்தான் சுதந்திரப் போரின் முதல் ஆயுதமாக கைக்கொண்டார்…

ஹிந்து அல்லாத சிறுபான்மையினர் மனத்தில் ஹிந்துக்கள் மீது அச்சத்தை விதைத்து , ஹிந்துக்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றுகிறோம் என்று வேஷம் போடுவதுதான் இங்கு பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சி அரசியல்…ஹிந்து மதம் மீது வெறுப்பை உருவாக்க இவர்கள் பரப்பும் பொய்களை சுக்குநூறாக உடைப்பது விநாயகர் சதுர்த்தி திருவிழா & ஊர்வலம்…பிராமணர்களைத்தவிர வேறு எவரும் பூசை செய்ய முடியாதா ?

இதோ , விநாயகருக்கு எல்லா சாதியினரும் பூஜை செய்கிறார்கள்…பட்டியல் சமூகத்தினர் கோயிலுக்குள் நுழைய முடியாதா ? இதோ விநாயகர் அவர்கள் தெருவிலேயே பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறார்…ஒரு பட்டியல் சமூகத்தவர் பூசாரியாக முடியுமா? இதோ , விநாயகருக்கு அவர் பூஜை செய்ய , அந்தப்பகுதி ஹிந்துத்வர்கள் சாதி வேறுபாடின்றி சாமி கும்பிட்டு அவரிடம் விபூதி வாங்கிப் பூசிக்கொள்கிறார்கள்…( இதைப் பல இடங்களில் நானே நேரில் பார்த்துள்ளேன்…) பட்டியல் சமூகத்தவர் பூஜை செய்யும் பலநூறு கோயில்கள் இங்குண்டு….

MITHUNAM Rasipalan மிதுனம் கோபம் அதிகரிக்கும் ஒரு ரூபாய் வரவு வந்தால் பத்து ரூபாய் செலவு வரும்

ஆனால் அந்தந்த கோயில்களுக்குப் போனால்தான் தெரியும்…ஆனால் விநாயகர் சதுர்த்தி வழிபாடு வீதிக்கு வீதி , தெருவுக்குத் தெரு பொதுமக்கள் கண்முன் நடக்கிறது…காலம்காலமாக அரசியல் கட்சிகள் கட்டிவைத்த பொய்க்கோட்டைகள் கண் முன் சுக்குநூறாக உடைகின்றன…

இதைதான் அவர்களால் தாங்க முடியவில்லை…ஏதாவது செய்து இந்த விழாவைத்தடை செய்ய வேண்டுமே என்று துடித்தார்கள்…வருடாவருடம் கெடுபிடிகளை அதிகரித்துக்கொண்டே போனார்கள்..( இதில் இரு கழகங்களுக்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை…ஜெயலலிதா ஆட்சியில் தான் விநாயகர் சிலை போலீஸ் வேனில் ஏற்றப்பட்டது…) என்னசெய்தும் விழாவின் உற்சாகத்தைத் தடுக்கவே முடியவில்லை…விநாயகர் திருவருளால் வருடாவருடம் சிலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது….

செய்வதறியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்த தீராவிட கழிசடைக் கும்பலுக்கு நல்ல வாய்ப்பாக வந்து சேர்ந்தது சீன கம்யூனிச கொரோனா தொற்று….இதைக் காராணமாகக் காட்டி கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தைத் தடை செய்தார் ஸ்டாலினின் அடிமையான எடுபிடி…அதை அப்படியே தொடர்கிறது இந்த மிஷனரி அடிமை அரசு…போன வருடமாவது தொற்றின் தீவிரம் அதிகம்…தடுப்பூசியும் இல்லை…இப்போது தொற்றின் தீவிரம் கணிசமாகக் குறைந்துள்ளது…பெருமளவில் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது…

பள்ளி , கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன….சினிமா தியேட்டர் முதல் டாஸ்மாக் வரை எதற்கும் தடையில்லை…ஆனால் கோயில்கள் மட்டும் வாரம் மூன்று நாட்கள் மூடப்படுகின்றன…எந்த விழாக்களுக்கும் அனுமதியில்லை…இப்போது விநாயகர் விழாவுக்கும் தடை….

இரண்யகசிபு வகையறாக்களிடம் ஆட்சி கிடைத்தால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது….ஆனால் இதற்கு முன் விநாயகரிடம் விளையாட்டுக் காட்டியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இந்த கம்சன் கும்பல் மறந்துவிட்டது…அவர்களுக்கு என்ன நடந்ததோ , அது இவர்களுக்கும் நடக்கும்…நாம் அப்போது வேடிக்கை பார்ப்போம்..

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் சரவணகுமார்.

Exit mobile version