ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கமாட்டீர்களா? மத்தவங்க இளிச்சவாயர்களா- ஊடகங்களை கிழித்த கிருஷ்ணசாமி !

நீட் தேர்வு; ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எடப்பாடி அரசை அடிமை அரசு என்றும் அடிமை அரசு பதவி விலக வேண்டும் என்று சொன்னார்கள். திமுக பதவியேற்றதிலிருந்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஸ்டாலினை பார்த்து ஊடகங்கள் கேள்வி கேட்காதது ஏன்? தலைவர்- டாக்டர் கிருஷ்ணசாமி

2017ல் ஒரு பெண்மணி இறந்தபொழுது அப்பொழுது ஆட்சியில் இருந்த எடப்பாடிபழனிசாமி தலைமையினாலான அரசை அடிமை அரசு என்று கூறி எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று குற்றம் சுமத்தி பதவிவிலக சொல்லி அவ்வளவு பெரிய மக்கள் இயக்கம் திரட்டி போராட்டம் நடத்தினீர்கள்.

கடந்த மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்ற பின்பு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு 3 பேர் இறந்திருக்கிறார்கள் NEET தேர்வினால் தற்கொலை செய்துள்ளனர்.ஏன் நீங்கள் 12ஆம் தேதி தேர்வுக்கு 9ஆம் தேதி சட்டசபை கூட்டத்தில் நீட் தேர்வு நடத்த முடியாது என்று ஏன் நீங்கள் சொல்லவில்லை.

இதை ஏன் எந்த ஒரு ஊடகமும் விவாதிக்கவில்லை,அது உங்கள் கடமை இல்லையா நான்காவது தூணான ஊடகங்கள் உங்களுக்கு தான் எங்களை விட பொறுப்புகள் அதிகமாக இருக்கிறது.மக்கள் உங்களை நம்பி தான் இருக்கிறார்கள் அடிமட்ட மக்களின் குரலாக விளங்கும் ஊடகங்கள்.

ஏன் இது குறித்து பேசவில்லை ஜனநாயக நாட்டில் கருத்துக்களை அதிகம் தெரியப்படுத்துவது ஊடகங்களே எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக ராஜினாமா செய் என்று அவர் முதல்வராக இருந்த போது கடுமையாக சாடியது ஊடகங்கள்.திமுக கடுமையாக ஆர்ப்பாட்டம் நடத்தியது தற்போது 3 மாணவர்கள் உயிர்இழந்துள்ளனர்.

இதுவே வேறு யாராவது முதல்வராக இருந்திருந்தால் ஊடகங்கள் என்ன செய்திருப்பீர்கள்.நீங்கள் ஏன் இதுகுறித்து கேட்கவில்லை ஊடகங்கள் தான் கேட்க வேண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் நீட் ரத்து செய்வோம் என்று கூறினார்களே ஏன் நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று ஏன் கேட்கவில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஊடகங்களை கடுமையாக சாடி பேசியுள்ளார்.இது எந்த ஒரு தொலைக்காட்சியில் வரவில்லை யூடியூபில் மட்டுமே பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version