மத நல்லிணக்கத்துக்கான விருது பெற்ற ஜுபைர் அஹ்மது மீது வழக்கு பதியப்படுமா?

hema malini

hema malini

குடியரசு தின விழாவில், தமிழகத்தில் மத நல்லிணக்கத்துக்கான விருதை Alt News ஜுபைர் அஹ்மதுக்கு கொடுக்கப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்து கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால் Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் ட்விட்டரில் தரக்குறைவான வார்த்தைகளால் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியது சம்பந்தமாக இவர் மீது FIR பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று தற்போது ஜாமினில் இருக்கிறார். இந்த நபருக்கு தான் சமூக நல்லிணக்க விருது வழங்கியுள்ளார் ஸ்டாலின் .

ஃபேக்ட் செக்கர் என்ற பெயரில் கருத்துக்களை பரப்பி வரும் ஜுபைர் அஹ்மது, மீண்டும் வாயை கொடுத்து வம்பில் மாட்டியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றியதை பற்றி பாஜக எம்.பி ஹேமமாலினி அவர்கள் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதாவது இந்த சட்டம் ஹிந்து , முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவருக்கும் சமமான நீதியை வழங்கிட வழிவகை செய்கிறது என்ற கருத்தை அவர் தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் எதாவது ஒரு சட்டம் கொண்டுவந்து விட்டால் போதும் அதை பற்றி தீர ஆராயாமல் அதை பற்றி பொய்யைப் பரப்புவார்கள்….. இல்லையென்றால் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூரான கருத்தை தெரிவிப்பார்கள். நம்ப ஜூபைர் அஹ்மது இரண்டையும் கலந்து கட்டிவிடலாம் என்று நினைத்து விட்டார் போல….ஏற்கனவே தர்மேந்திரா அவர்களுக்கு திருமணம் நடந்திருந்ததால், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஹேமமாலினி சொல்வதை கேளுங்கள் என்று நக்கலாக பதிவிட்டு இருந்தார் !!

வார்த்தைகளால் தனிநபர் தாக்குதல் செய்து அவரை மடக்கி விடலாம்என நினைத்துக் கொண்டு , தானாக வந்து வலையில் சிக்கியிருக்கிறார் ஜூபைர் அஹ்மது ,அவர் சொன்ன லாஜிக் படியே பார்த்தால் கூட…. மாற்று மதத்தில் பலதார திருமணம் என்பது சர்வ சாதாரணமான ஒன்று என்பது வெளிப்படையாகிறது !!
அந்த வகையில் பார்த்தால், இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் என்ற எந்தவிதமான பாகுபாடும் பார்க்காமல், பெண்களின் உரிமையை பாதுகாக்கும் சட்டமாக தான் பொது சிவில் சட்டத்தை பார்க்க முடியும் !!

மீண்டும் இந்துக்களுக்கு சட்டம் வேறு இஸலாமியர்களுக்கு சட்டம் வேறு ஜூபைர் அஹ்மது சொல்லாமல் சொல்லியுள்ளார்.இது மத உணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக்கவும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்வது போல் அமைந்துள்ளதால் பாஜக எம்.பி ஹேமமாலினிஇவர் மேல் வழக்கு தொடர்வார் என செய்திகள் பரவ தொடங்கியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஜுபைர் அஹமது சொல்லும் காரணங்கள் போன்றவற்றால் தான், பொது சிவில் சட்டத்தின் தேவையே அதிகரிக்கிறது!என்றும் கருத்துக்கள் பரவுகிறது..

Exit mobile version