குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்த மசோதா பாரளுமன்றம் மற்றும் மாநிலங்களைவையில்,கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினார்கள். பல பகுதிகளில் கலவரமாக மாறியது . இந்த சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என மத்திய அரசு கூறியும் அரசியல்வாதிகள் தலையிட்டால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. உத்திரபிரேதேசத்தின் தலைநகர், லக்னோவில், கடந்த, டிசம்பர், 19 தேதி நடந்த போராட்டத்தின் போது, வன்முறை வெடித்தது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வேண்டுமென்றே பொது சொத்துக்களுக்கு குந்தகம் விளைவித்தனர். பெருத்த சேதத்தை ஏற்படுத்தினார்கள் மேலும் அரசு பேருந்துகள் காவல் வாகனங்களை அடித்து நொறுக்கி எரித்தனர், சாலைத் தடுப்புகளை உடைத்தும், வன்முறையில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் உரிய இழப்பீட்டை வசூலிக்க, உத்திர பிரதேச யோகி தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதற்கிடையே, கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த 90 நாட்களுக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு பல தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உதிர்ப்பிரேதேசம் முழுவதும் இழப்பீடு வசூலிப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமல்படுத்தப்பட்டதையடுத்து, உ.பி தலைநகர் லக்னோவில் இழப்பீடு வசூலிக்கும் பணி துவங்கியது.
இது குறித்து தாசில்தார், சாம்பு சரன் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு குந்தகம் விளைவித்த 54 பேர் மீது, காவல்துறை வழக்கு பதிவு செய்து உள்ளனர்.மேலும் அவர்களிடமிருந்து சேதம் விளைவித்த பொருட்களுக்கு உரிய பணத்தை திரும்ப பெறவும் அரசு உத்தரவிட்டது சேதம் விளைவித்தவர்களிடம் இருந்து 1.55 கோடி ரூபாய் இழப்பீடு வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, 54 பேருக்கும், ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.
அவர்களிடமிருந்து அபராத தொகை அல்லது அதற்கு சமமான மதிப்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.லக்னோவில், ஹஸன்கஞ்ச் பகுதியில், மகானீர் சவுத்ரி என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையும், சிற்றுண்டி கடையும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.