உலகையே இந்து புராணங்களை படிக்க வைத்துவிட்டது கொரோனா, விரைவில் டிரம்பே கந்த சஷ்டி கவசம் படித்தாலும் படிக்கலாம்.

பிரேசிலில் கொரோனா பரவுகின்றது, கொரோனாவுக்கென மருந்தே இல்லை. டெங்கி காய்சல போன்றவற்றுக்கும் மருந்தே இல்லை

இந்த டெங்கி காய்ச்சலை பாராசிட்டமால் கொடுத்து கொடுத்து குறைப்பது போல, கொரோனாவுக்கு எய்ட்ஸ் மருந்து மற்றும் மலேரியாவுக்கான மருந்தை கொடுத்து குணபடுத்த முயற்சிக்கின்றார்கள் இதில் ஓரளவு பலன் உண்டு

இந்த மலேரியாவுக்கான மருந்தில் ஒன்றுதான் ஹைட்ரோகுளோரோயின், அமெரிக்கா கேட்டதும் இதுதான் இந்தியா இலங்கைக்கு கொடுத்ததும் இதுதான், இப்பொழுது பிரேசில் கேட்பதும் இதுதான்

இதில் பிரேசில் அதிபருக்கு அறிவு இருந்திருக்கின்றது, மகா கில்லாடியும் சாதுர்யமும் மிக்கவர் அவர், அன்னார் எப்படி கேட்டார் தெரியுமா?

“அன்புக்கும் கருணைக்கும் வீரத்துகும் உதாரணமான பகவான் ராமனின் நாட்டை ஆளும் மோடியே

ராமாயணத்தில் லட்சுமணன் மயக்கமுற்று விழுந்தபொழுது அனுமன் மூலிகை மலையினை தூக்கி வந்து காத்தாரே, அப்படி எமக்கு மருந்து அனுப்பி காப்பாற்ற கூடாதா?

ராமன் தன்னை நம்பிய எல்லோரையும் காத்தானாமே, ராமனின் நாடு சகோதர நாடான எங்களை காக்க கூடாதா?”

இப்படி கேட்டபின் மத்திய அரசு என்ன செய்யும் , ராமனை போல “ஏ பிரேசிலே இலங்கையோடு இருவரானோம், ரஷ்யாவோடு மூவரனாமோம், அமெரிக்காவோடு நால்வரானோம், உன்னோடு ஐவரானோம்” என சொல்லி கண்ணீரை துடைத்து கொண்டது.

ஆக இந்திய அரசிடம் எப்படி பேசினால் காரியமாகும் என உலக நாடுகள் அறிந்து, இப்பொழுது அவசரமாக ராமாயணம், மகாபாரதம் எல்லாம் படிகின்றார்கள்

பிரேசில் அரசு ராமாயண காட்சியினை சொன்னதை அடுத்து, கிருஷ்ணன் குசேலன் கதை இல்லை கிருஷ்ணன் பலராமன் கதை, கிருஷ்ணன் அர்ச்சுணன் கதை இல்லை ஏகலைவன் கதை என எதையாவ்து சொல்லி மருந்து கேட்க ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அவசரமாக மகாபாரதம் படிகின்றன‌.

ஆக உலகையே இந்து புராணங்களை படிக்க வைத்துவிட்டது கொரோனா, விரைவில் டிரம்பே கந்த சஷ்டி கவசம் படித்தாலும் படிக்கலாம்.

“காக்க காக்க இந்தியா காக்க‌
நோக்க நோக்க மோடி நோக்க..”

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version