பாகிஸ்தான் சில ஆண்டுகளாக இருந்த இடம் தெரியாமல் இருந்தது. கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் மிக அமைதியாக சென்று கொண்டிருந்தது காஷ்மீர். தீவிரவாத சம்பவங்கள் எதுவும் இல்லாததால் நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்தியா மட்டும் அல்லாது, உலகம் முழுவதிலும் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மக்கள் படையெடுக்க தொடங்கினர்.
குறிப்பாக தற்போது கோடை காலத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்தலங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குழுமியிருந்தனர். அப்போது அங்கு வந்த ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் பயணிகள் மீது திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல் சம்பவத்தை நடத்தி விட்டு தீவிரவாதிகள் மறைந்த நிலையில் இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கிறது. போர் போன்ற அவசர காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அவசரகால ஒத்திகையும் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் உள்ளூர் நபர்களின் உதவியோடு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அனந்தநாக், குப்வாரா, பெகல்காம் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு அருகே நீலம் பள்ளத்தாக்கு வழியாக தீவிரவாதிகள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. காடுகளில் மறைந்து வாழ்வது எப்படி என அவர்கள் பயிற்சி அளித்ததாகவும், தீவிரவாதிகளில் ஒருவரான ஹாஷிம் மூசா பாகிஸ்தானில் சிறப்பு பாதுகாப்பு படையில் பாரா கமாண்டமாக வேலை பார்த்தவர் என்ற தகவல் பாகிஸ்தானுக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தது.
இதனால் கோபமடைந்த இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப்படை, கப்பற்படை தளபதிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தாக்குதலுக்கு நாங்கள் தயார் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. முக்கிய நாடுகள் இந்தியா பக்கம் நிற்கின்றன. ஏற்கனவே இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் நான் போரை விரும்பவில்லை. அமைதியை தான் விரும்புகிறேன். இருந்தாலும் ஒருவேளை பாகிஸ்தான் இந்தியாவை தாக்கினால் நான் இந்தியா பக்கம் நிற்பதுடன் பாகிஸ்தானை அழிக்கவும் செய்வேன். ஏனெனில் எனக்கு இந்திய மக்களை மிகவும் பிடிக்கும். அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அமெரிக்க டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்ல . அது பல செயல்பாடுகளில் தீர்க்கமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கிய அதி நவீன தளவாடங்களை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்று கடுமை காட்டும் அளவிற்கு பாகிஸ்தான் மீது வெறுப்பும் பாரதத்தின் மீது இணக்கமும் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது தீவிரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது, இந்தியாவுடன் ரஷ்யா நிற்கும் என உறுதி அளித்தார். இதேபோல இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அவர் இந்த விவகாரத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா பக்கம் ஜப்பான் இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.
இது மட்டுமின்றி ஏற்கனவே இந்தியாவுக்கு அரசியல் விமானங்களை வழங்கி வரும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் பக்கமே நிற்கின்றன. சீனா பாகிஸ்தானுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி செய்ய வாய்ப்பு இருந்தாலும் இந்தியா சீனாவின் மிகப்பெரிய பொருளாதாரக் கூட்டாளியாக இருக்கிறது. இதனால் சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவ தயங்குகிறது. துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்தாலும், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தால் அந்த நாடுகளால் தாங்கிக் கொள்ள முடியாது.
தற்போதைய சூழலில் போர் நடந்தாலும் இந்தியாவின் கையே ஓங்கி நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல் ஆகியவை கூட்டு சேர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கலாம் என்கின்றனர் உலக பாதுகாப்பு நிபுணர்கள்.
அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவின் போர் விமானங்கள் அதிநவீன தொழில்நுட்பங்கள் எதையும் வர இருக்கும் யுத்தத்தில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்த முடியாது. இரண்டாவது விஷயம் சீனாவின் ஜே 17 – ஜே 10 ரக விமானங்களையும் பாகிஸ்தான் கைவசம் இருக்கும் ஷாஹீன் – அஃப்ரிதி – கோரி – கஜினி என்னும் சீனா – பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பு ஏவுகணைகளையும் மட்டுமே நம்பி பாகிஸ்தான் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகிறது .
காரணம் சீனாவின் விமானங்கள் அதன் தளவாடங்கள் எதுவும் இதுவரை எந்த ஒரு யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக சீனாவில் விமானங்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஒரு நேரடி யுத்தத்தில் ஈடுபட இருக்கிறது. அதுவும் உலகின் மூன்றாவது சக்தி வாய்ந்த விமானப்படையை வைத்திருக்கும் பாரத விமானப்படையோடு மோத இருக்கிறது என்பதுதான் சீனாவின் பதட்டத்திற்கு காரணம்.
பாகிஸ்தானை பாதுகாத்தால் மட்டுமே அங்கிருக்கும் தன் முதலீடுகளை பாதுகாக்க முடியும். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆதரவாக களம் இறங்கினால் பாகிஸ்தான் உடன் சேர்ந்து தானும் பாரதத்திடம் மிதிபட வேண்டி வரும் என்ற இக்கட்டான நிலையில் சீனா சிக்கி தவிக்கிறது. பாவம் கல்வானில் வாங்கியது சீனா இன்னும் மறக்கவில்லை போல.
அதே நேரத்தில் அமெரிக்காவின் நவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் அளவிற்கு இந்தியாவின் ஏவுகணைகள் தரம் வாய்ந்தது. சீனாவின் தயாரிப்புகள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. சமீபத்தில் ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யா பயன்படுத்திய ஏவுகணைகளில் பாரதத்தின் அக்னி உள்ளிட்ட பல தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டதும் உலகறியும். அப்படி இருக்க பாரதத்தின் விமானப்படை சீனாவின் போர் விமானங்களை நடுவானில் பந்தாடினால் அதில் முதல் அடி பாகிஸ்தானுக்கு எனில் உச்சகட்ட கேவலம் சீனாவிற்கும் தான் என்பது சீனாவின் கவலை.