Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

WriteOff க்கும் Waiver க்கும் வித்தியாசம் தெரியாத ராகுல், தெரிந்தும் புளுகும் ப.சிதம்பரம்..

Oredesam by Oredesam
April 30, 2020
in அரசியல்
0
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் எல். முருகன் அறிக்கை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலில், இந்தியாவின் பெரு வணிக நிறுவனங்களுக்கு 68, 607 கோடி ரூபாய் வாரா கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

முதலில் ராகுல் காந்தி Write Off மற்றும் Waiver இந்த இரண்டுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை அறிய வேண்டும்.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

துரதிருஷ்ட வசமாக நாம் இரண்டையுமே “தள்ளுபடி” என்று புரிந்து கொள்கிறோம்.

முதலில் Write off என்பதைப் பார்ப்போம். இதைத் தமிழ்ப்படுத்தினால் “அழித்து எழுதல்” என்று ஓரளவுக்குப் பொருத்தமாகக் கூறலாம்.

நமது வங்கிகளில் வாராக்கடன் என்று வகைப்படுத்துவதில் – தற்போதுள்ள நடைமுறையில் – உள்ள சிக்கலை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் a) வீட்டுக் கடன் b) விவசாயக் கடன் c) வாகனக் கடன் என 3 கடன்களைப் பெற்றுள்ளார் என வைத்துக் கொள்வோம்.

இதில் 2 கடன்களை அவர் முறையாகச் செலுத்தி வருகிறார் – மீதமுள்ள ஒரு கடனில் சில தவணைகள் நிலுவையாகி – அந்த ஒரு கடன் மட்டும் – வாராக்கடன் அல்லது ‘செயல் படாத கடன்’- Non Performing Asset- வட்டியும் அசலும் வசூல் ஆகாத கடன் – என்று வகைப்படுத்தப் பட்டாலும் கூட…

அவர் ஒழுங்காகச் செலுத்தும் மற்ற 2 கடன்களின் தொகைகளும் சேர்த்தே NPA ஆகிவிடும்!

Customer ID என்று அந்த Borrower ன் பெயரில் என்ன எல்லாம் அந்த ID ல் உள்ளதோ அந்தக் கடன்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமா NPA தொகையாக மாறிவிடும்.

இந்தப் புரிதலுடன் நாம் முதலில் WRITE OFF ஐ பார்க்க வேண்டும்.

வங்கிகள் ஒவ்வோர் ஆண்டும் தங்களின் BALANCE SHEET ஐ சமர்ப்பிக்கின்றன. இந்நிலையில் இப்படித் தேங்கிப் போகும் NPA எனப்படும் வாராக்கடன்கள் அவற்றின் BALANCE SHEETஐ பாதிக்கும்.

எனவே வங்கிகள் தங்களின் BALANCE SHEET ஐ “சுத்தம் செய்து கொள்ள” இந்த WRITE OFF என்னும் வழிமுறையைத் தேர்ந்தெடுக்கின்றன.

அதாவது கிளைகள் அளவில் அந்தக் கடன்கள், அந்த BORROWER ன் கடன் கணக்கு எண்ணுக்கு நேராக “WRITE OFF ” எனக் காட்டப்பட்டு தலைமை அலுவலகத்தின் வரம்புக்குப் போய்விடும்.

அந்தத் தொகைகளை வங்கியின் தலைமை அலுவலகம் RECOVERABLES என்றே வைத்துக் கொள்ளும்.

அதாவது வாடிக்கையாளரிடம் இருந்து அத்தொகையை “வசூலிக்கும் உரிமை” யை வங்கி இழந்துவிடவில்லை.

மேலும் Credit Informatio Bureau of India Limited (CIBIL) என்ற அமைப்பு உள்ளது. அதன் ரிக்கார்டுகளில் இவ்வாறு யார் பெயரில் எவ்வளவு தொகை WRITE OFF செய்யப்பட்டது என்ற தகவல்கள் வங்கிகளால் அனுப்பப்பட்டு விடும்.

அதாவது வங்கிகளின் கிளைகளிலும் வாடிக்கையாளரின் கடன் கணக்கு – ACCOUNT CLOSED – என்று காட்டாது! அவர் கணக்கு எண்ணை கம்ப்யூட்டரில் தட்டினால் “WRITE OFF” என்ற குறிப்பு வருமே தவிர ACCOUNT CLOSED என்று காட்டாது.

மேலும் தலைமை அலுவலகத்தின் பார்வைக்கு மாற்றப்பட்டு, WRITE OFF என வகைப்படுத்தப்பட்ட இக்கணக்கு – கடனாளியின் பெயருடன் CIBIL அமைப்பின் ரிகார்டுகளுக்கும் போய்விடும் – இவ்வாறு அது 10 வருடம் CIBIL பதிவேட்டில் இருக்கும்.

இப்போது அந்த WRITE OFF செய்யப்பட்ட கடனாளி, எந்த வங்கிக்குச் சென்று வேறு ஏதாவது கடன் கேட்டாலும் CIBIL REPORT ல் அவர் பெயரில் ஏற்கனவே WRITE OFF செய்யப்பட்ட கடன் விபரங்கள் வந்துவிடும்.

அந்தத் தொகையை நேர் செய்து, குறிப்பிட்ட வங்கியில் இருந்து அதற்கான சான்றிதழை அவர் பெற்றால் மட்டுமே வேறு கடன்கள் வழங்க முடியும்.

மேலும் சட்டபூர்வமாகவே அந்த WRITE OFF கடன் தொகையை ‘வசூலிக்கும் உரிமை’ (RIGHT TO RECOVER) வங்கிகள் இழப்பதில்லை.

அடமானமாகப் பெறப்பட்ட சொத்துகளை MORTGAGE SUIT போட்டு வசூலிக்கலாம். ஒரு வேளை அந்தக் கடனாளிக்கு வேறு ஏதேனும் சொத்துக்கள் – அடமானம் வைக்கப்படாமல் இருப்பின் – அவற்றையும் MONEY SUIT போட்டு வசூல் செய்யலாம். ABJ எனப்படும் ATTACHMENT BEFORE JUDGEMENT எனப்படும் வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

எனவே WRITE OFF என்பது இவ்வளவு வாய்ப்புக்களையும் உள்ளடக்கிய ஒரு கணக்கியல் நடைமுறை. (ACCOUNTING PROCEDURE).

ஆனால் WAIVER என்பது கடனை – முழுவதுமாகவோ, வட்டியை மட்டுமோ – சில தவணைகளையோ தள்ளுபடி செய்வது.

இது பயிர்க்கடன் போன்ற விவசாயம் சார்ந்த கடன்களில் பருவமழை பொய்ப்பது, வெள்ளத்தில் பயிர்கள் அழிவது… போன்ற NATURAL DISASTER சமயங்களில் விவசாயிகளுக்குப் பெரும்பாலும் வழங்கப்படும். இது WAIVER.

இந்த WAIVER என்பது வங்கியின் PROFIT & LOSS ACCOUNT ல் நஷ்டம் என்று காட்டித் தள்ளுபடி செய்யப்படும்.

எனவே WRITE OFF க்கும், WAIVER க்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டும்.

இதற்கான சரியான விளக்கத்தை மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், புள்ளி விவரங்களோடு ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்

தற்போதைய வாராக் கடன் பிரச்னைக்கு முக்கிய காரணம் முந்தைய 2004-14 காங்கிரஸ்-திமுக கூட்டணியின் ஐக்கிய முற்போக்கு ஆட்சியாகும். இது குறித்து அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் 2006-08 சமயத்தில் தான் இந்தப் பிரச்னை பூதாகாரம் எடுக்க ஆரம்பித்தது என்கிறார் அவர். அப்போதைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் விதிகளுக்கு முரணாக முன்னரே வங்கிகளை ஏமாற்றியவர்களாக இருந்தும் அதிக அளவில் கடன்களைப் பெற்றனர் என அவர் கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் தனியார் வங்கிகள் அவர்களுக்கு கடன் வழங்க மறுத்தன. ஆனால் பொதுத் துறை வங்கிகள் கடன்களைக் கொடுத்தன என்றும் கூறியுள்ளார்.

அதிக அளவில் கடன்களை வாங்கி வெளிநாடு தப்பிச் சென்ற முக்கியமான மூன்று பேரும் – விஜய் மால்யா, நீரவ் மோடி, சோக்ஸி – காங்கிரஸ் ஆட்சியில் அதிக கடன் பெற்றவர்கள். கட்சி தலைமைக்கு வேண்டியவர்கள். மால்யாவுக்கு வங்கி அதிகாரிகள் மறுத்தும் கடன் தலைமை மூலம் பணம் கொடுக்கப்பட்டது.

மோடி அரசு அவர்கள் மூன்று பேரிடமிருந்து மட்டும் ரூபாய் 18,300 கோடி அளவு சொத்துகளை கையகப்படுத்தி உள்ளது. சொகுசு மாளிகைகள் உள்ளிட்ட சொத்துகள் வங்கிகளால் கைப்பற்றப் பட்டுள்ளன.

அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு வெளி நாடுகளில் வழக்குகளை தீவிரமாக நடத்தி வருகிறது. வழக்குகள் இறுதி நிலையில் உள்ளன. ஒரு குற்றவாளி அங்கேயே சிறைச்சாலையில் உள்ளார். மத்திய அரசு அந்த அரசுகளுக்கு நிர்ப்பந்தமும் கொடுத்து வருகிறது.

மேலும் மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் வாராக் கடன் விசயத்தில் புதியதாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விதி முறைகள் கடுமையாக்கட்டுள்ளன. 2015 முதல் ரூபாய் 50 கோடிக்கு மேல் வாராக்கடன் உள்ளவர்களின் கணக்குகளை தீவிரமாக கண்காணிக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப் பட்டுள்ளன.

ஏமாற்றி விட்டு வெளிநாடு தப்பயோடுவோர் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது 9967 திரும்பி வரும் வழக்குகள் மற்றும் 3515 முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திவால் சட்டம் 2016 மூலம் பெறு நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக பூஷன் ஸ்டீல்ஸ் என்னும் ஒரு நிறுவனம் மூலம் மட்டும் 34000 கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துள்ளது. அதே போல் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் மூலம் ரூபாய் 40000 கோடிக்கு மேலான தொகை.

எனவே முந்தைய காங்கிரஸ் ஆட்சி செய்த தவறுகளை மோடி அரசு சரி செய்து வருகிறது. ஆனால் ராகுல் காந்தி குறை கூறி வருகிறார். மேலும் அவர்களின்

ஆட்சியில் 2009-10 முதல் 2013-14 வரை நான்கு ஆண்டுகளில் மட்டும் 1,45,226 கோடி ரூபாய் write off செய்யப்பட்டுள்ளது. இதுதான் உண்மை நிலை.

மோடியின் இந்த அரசாங்கத்தில் பொதுச் சொத்தை யாரும் கொள்ளையடித்து விட முடியாது என்பதை ராகுல், ப. சிதம்பரம் போன்றவர்களுக்கு நன்கு புரியும். அவர்கள் கொடுத்த கடனைத்தான் மோடி அரசு மீட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் புரியும். குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கிறது.

பொய்க் குற்றச்சாட்டுகளை எழுப்பி கோரானா பணியை திசை திருப்பி கெட்ட பெயர் உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் பொது மக்களுக்கு உண்மை புரியும். பொதுமக்களை ராகுலும் ப.சிதம்பரமும் ஏமாற்ற முடியாது.

Share583TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!
அரசியல்

குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!

August 28, 2025
தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!
அரசியல்

தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!

August 28, 2025
AI மூலம் எடிட்செய்து மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு-ஆதாரத்தை வெளியிட்ட நயினார்நாகேந்திரன்
அரசியல்

AI மூலம் எடிட்செய்து மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு-ஆதாரத்தை வெளியிட்ட நயினார்நாகேந்திரன்

August 21, 2025
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்தா? மத்திய ரிசர்வ படை பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவு!
அரசியல்

நெல்லையில் மாநாட்டில் அமித்ஷா ! தமிழக அரசியலில் அடிக்கப்போகும் சூறாவளி இதுதானாம் !

August 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்த சாதிகார்கள் கடைக்கு செல்லும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை?  சி.எஸ்.ஐ பெண் போதகர் பியூலா!

இந்த சாதிகார்கள் கடைக்கு செல்லும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை? சி.எஸ்.ஐ பெண் போதகர் பியூலா!

November 26, 2021

உலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள்!!! இதனால்தான் பொங்குகிறார்கள் திருமா,வீரமணி உள்ளிட்டோர்.

November 23, 2020
கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் குறித்த கட்டுக்கதைகளை முறியடிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் குறித்த கட்டுக்கதைகளை முறியடிக்கப்பட்டது.

May 29, 2021
உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!

உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!

November 26, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x